- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா ரசிகர்களுக்கு ஒரு செம நியூஸ், கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் ரெடி? எப்போ வெளியிடுறாங்கன்னு தெரிஞ்சிக்கனுமா?

சூர்யா ரசிகர்களுக்கு ஒரு செம நியூஸ், கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் ரெடி? எப்போ வெளியிடுறாங்கன்னு தெரிஞ்சிக்கனுமா?

- Advertisement -

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “கங்குவா”. இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். சூர்யாவின் கெரியரில் மிகவும் அதிக பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது.

இத்திரைப்படத்தின் பாதி காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி முடித்துவிட்டார்களாம். வருகிற 20 ஆம் தேதி அடுத்தக்கட்ட படப்பிடிப்பை படக்குழுவினர் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கொடைக்கானல் பகுதியில் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. ஏற்கனவே கொடைக்கானலில் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

- Advertisement -

“கங்குவா” திரைப்படம் ஒரு வரலாற்று ஃபேன்டசி திரைப்படமாக உருவாகி வருகிறது.  இத்திரைப்படத்தில் சூர்யா மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார். ஒரு வரலாற்று ஃபேன்டசி திரைப்படத்தில் சூர்யா நடிப்பது இதுவே முதல் முறையாகும். ஆதலால் சூர்யா ரசிகர்கள் வெறிகொண்டு இத்திரைப்படத்திற்காக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் “கங்குவா” திரைப்படத்தை குறித்து ஒரு மாஸ் ஆன தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது ‘கங்குவா” திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அடுத்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவரவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -

“கங்குவா” திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இத்திரைப்படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. தென்னிந்திய சினிமா வரலாற்றில் பத்து மொழிகளில் வெளியாகவுள்ள முதல் திரைப்படம் “கங்குவா” என்பது இதில் குறிப்பிடத்தக்கது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையான திசா படானி நடித்து வருகிறார். “கங்குவா” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்

- Advertisement -

சற்று முன்