- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை நிவேதா பெத்துராஜ் வில்லியாக மாறினாரா பிக்பாஸ் ஜூலி? நிச்சயதார்த்த புகைப்படங்கள் திடீரென மாயமானது ஏன்?...

நடிகை நிவேதா பெத்துராஜ் வில்லியாக மாறினாரா பிக்பாஸ் ஜூலி? நிச்சயதார்த்த புகைப்படங்கள் திடீரென மாயமானது ஏன்? – இணையத்தில் வெடித்த சர்ச்சை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒருநாள் கூத்து படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தொட்ந்து திமிரு புடிச்சவன் டிக் டிக் டிக் பொதுவாக எம்மனசு தங்கம் உள்ளிட்ட சில படங்களில் நிவேதா பெத்துராஜ் நடித்தார். இதில் விஜய் ஆண்டனியுடன் போலீஸ் எஸ்ஐ கேரக்டரில் நிவேதா பெத்துராஜ் நடிப்பு நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை நிவேதா பெத்துராஜ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் தனது ரசிகர்களுக்கு முக்கிய தகவலை கூறியிருந்தார். வருகிற 2026 ஜனவரியில் முகமது என்கிற தொழிலதிபருடன் சென்னையில் திருமணம் என்றும் அதில் கூறியிருந்தார்.

- Advertisement -

நாங்கள் இருவரும் தீவிரமாக காதலித்த நிலையில் இருதரப்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணம் இது என்றும் நிவேதா பெத்துராஜ் அப்போது கூறியிருந்தார். திருமணத்துக்கு பிறகும் நான் தொடர்ந்து நடிப்பேன் என்றும் அதில் தனது வருங்கால கணவருக்கு எந்த ஆட்சேபனையும் இருக்காது என்றும் நிவேதா பெத்துராஜ் அந்த பதிவில் நம்பிக்கையாக கூறியிருந்தார்.

இணையத்தில் வெளியான அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும், நிவேதா பெத்துராஜூடன் இருப்பவர் பெயர் முகமது. இவர் பிக்பாஸ் ஜூலியின் முன்னாள் காதலர் என்ற தகவலை வெளியிட்டன். அது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் கொஞ்ச நாட்களில் அந்த பரபரப்பு அடங்கி விட்டது. ஜூலி தரப்பில் எந்த பதிலும் அப்போது இல்லை.

- Advertisement -

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் ஜூலி தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டு விரைவில் திருமணம் என்று கூறியிருந்தார். ஆனால் அதில் தனது வருங்கால கணவரின் முகத்தை அவர் காட்டவில்லை. தற்போது ஜூலியின் முன்னாள் காதலர் முகமதுதான் அவரை திருமணம் செய்யப் போகிறார் என்ற தகவல் வெளியானது.

விஜய் டிவியில் வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் முகமதுதான் ஜூலியின் வருங்கால கணவர் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில், நடிகை நிவேதா பெத்துராஜ் தனது வலைதள பக்கத்தில் முகமதுவுடன் இருந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை அதிரடியாக நீக்கியுள்ளார். அதனால் நிவேதா பெத்துராஜூக்கு பிக்பாஸ் ஜூலி வில்லியாக மாறிவிட்டாரா என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இந்த பஞ்சாயத்து தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்