கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் முகமூடி. இயக்குனர் மிஷ்கின் இயக்கிய இந்த படத்தில் நாயகனாக ஜீவா, வில்லனாக நரேன் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்த படத்தில்ததான் தமிழில் நடிகை பூஜா ஹெக்டே அறிமுகமானார். ஆனால் இந்த படம் சரியாக ஓடாததால் தமிழில் அவர் தொடர்ந்து வாய்ப்புகளை பெறவில்லை.
அதன்பிறகு தெலுங்கு இந்தி என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறிய பூஜா ஹெக்டே நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார். இந்த படம் விமர்சன ரீதியாக சரியாக வரவேற்பை பெறாவிட்டாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
இப்போது விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்திலும் பூஜா ஹெக்டே தான் நாயகியாக நடித்து வருகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்திலும் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் மே 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. அதே போல் காஞ்சனா 4 படத்திலும் நாயகியாக நடிக்கும் அவர் கூலி படத்தில் ஒரு பாடலுக்கும் பூஜா ஹெக்டே நடனமாடி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் பூஜா ஹெக்டே சமீபத்தில் இந்தியில் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறும் பூஜா ஹெக்டேவுக்கு இந்த 2வது சுற்று பிரகாசமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே விமானத்தில் பயணித்திருக்கிறார். நடுவானில் விமானம் பறந்துக்கொண்டிருந்த போது திடீரென பூஜா ஹெக்டே வைத்திருந்த அவரது மொபைல் போன் காணாமல் போய்விட்டது. அந்த விமானத்தில் நடிகர் வருண் தவானும் பயணித்த நிலையில், பூஜா ஹெக்டே விமானத்துக்குள் பதற்றத்துடன் தனது மொபைல் போனை தேடுவதை வீடியோவாக எடுத்து தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாார்.
அதில் காணாமல் போன அந்த மொபைல் போனை அவரே எடுத்து பூஜா ஹெக்டேவிடம் கொடுத்திருக்கிறார். மொபைல் போன் திடீரென காணாமல் போனதா, அல்லது நடிகர் வருண் தவானே எடுத்து வைத்துக்கொண்டு பூஜா ஹெக்டேவிடம் விளையாடினாரா என்பது தெரியவில்லை. ஆனால், செல்போனை கண்டுபிடித்து தந்ததற்காக உன்னை மன்னித்து விடுகிறேன் என்று நடிகை பூஜா ஹெக்டே தனது பதிவில் கூறியிருக்கிறார்.





