- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் திரையில் நடிகை சிம்ரன், புதுப்படம் ஒன்றில் யாருக்கு ஜோடியாக நடிக்கப் போறாங்க தெரியுமா? -...

மீண்டும் திரையில் நடிகை சிம்ரன், புதுப்படம் ஒன்றில் யாருக்கு ஜோடியாக நடிக்கப் போறாங்க தெரியுமா? – போடு வெடிய, கருடன் தந்த வாய்ப்பு இது!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில நடிகைகளை எப்போதுமே ரசிகர்களால் மறக்க முடியாது. தனது வசீகரமான தோற்றத்தாலும், அழகான நடிப்பாலும், சிறந்த நடனத்தாலும் பல நடிகைகள், தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றுள்ளனர். அவர்கள் படங்களில் நடிக்காவிட்டாலும், அவர்கள் நடித்த பழைய படங்களை காண ரசிகர்கள் எப்போதுமே ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வகையில் நடிகை சிம்ரன், தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக 1990ம் ஆண்டுகளில் இருந்தவர். அவர் நடித்த ஜோடி, நேருக்கு நேர், வாலி, பஞ்ச தந்திரம், கன்னத்தில் முத்தமிட்டால், பிரியமானவளே, நட்புக்காக, அவள் வருவாளா, வாரணம் ஆயிரம், பம்மல் கே சம்மந்தம், ரமணா உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பும், நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சந்திரமுகி படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் சிம்ரன்தான். ஆனால் அந்த கேரக்டரில் நயன்தாரா நடித்துவிட்ட நிலையில், மீண்டும் ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்ரன், பிதாமகன் படத்தில் ஒரு பாடலுக்கு சூர்யா, விக்ரமுடன் நடனமாடிய அந்த பாடல், எப்போதும் ரசிகர்களால் விரும்பி ரசிக்கப்படுகிறது.

இப்போது வயது 50களை நெருங்கி விட்ட நிலையில், படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்ட சிம்ரன், ஏதேனும் ஓரிரு படங்களில் மட்டுமே நடிக்கிறார். பேட்ட படத்துக்கு பிறகு அவர் நடிக்காத நிலையில், இப்போது புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். மணிகண்டன் நடித்த குட்நைட் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம்தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது.

இந்த படத்தில் சிம்ரன் கதாநாயகியாகவும், கதாநாயகனாக நடிகர் சசிக்குமாரும் நடிக்கின்றனர். கணவன், மனைவி கேரக்டரில் இருவரும் நடிக்கும் இந்த படம் ஒரு குடும்ப கதையை பின்னணியாக கொண்டது. சமூகத்துக்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்லும் படமாகவும் இது உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பல ஆண்டுகளாக சசிக்குமார் படங்கள் சரியாக ஓடாத நிலையில், அயோத்தி படம் மட்டுமே, அவரது பெயரை சொல்லியது. அதற்கு பிறகு, துரை செந்தில்குமார் இயக்கிய கருடன் படத்தில், சூரிக்காக சசிக்குமார் நடித்தார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சசிக்குமாருக்கு நிறைய பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. அதில் சிம்ரனுடன் அவர் நடிக்கும் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்