- Advertisement -
Homeபொழுதுபோக்குவடிவேலு ஆட்கள் என்னை ரவுண்டு கட்டி மிரட்டினார்கள்- ஓப்பனாக போட்டுடைத்த பிரபல காமெடி நடிகை

வடிவேலு ஆட்கள் என்னை ரவுண்டு கட்டி மிரட்டினார்கள்- ஓப்பனாக போட்டுடைத்த பிரபல காமெடி நடிகை

- Advertisement -

வடிவேலு மிகவும் புகழ் பெற்ற காமெடி நடிகராக இருந்தாலும் அவருடன் நடித்த சக காமெடி நடிகர்கள் பலரும் வடிவேலுவை குறித்து விமர்சிக்காத நாளே கிடையாது என்று கூறலாம். அந்தளவுக்கு எங்கு திரும்பினாலும் வடிவேலுவை குறித்த நெகட்டிவான பல விஷயங்கள் அவருடன் நடித்த சக காமெடி நடிகர்களால் பகிரப்படுகிறது.

தன்னுடன் நடிக்கும் சிறு சிறு காமெடி நடிகர்களை வடிவேலு வளரவிடமாட்டார் எனவும் அவர்களின் வாய்ப்புகளை பறித்துக்கொள்வார் எனவும் அவருடன் நடித்த நடிகர்கள் பல பேட்டிகளில் கூறி வருகின்றனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரபல காமெடி நடிகையான பிரேம பிரியா வடிவேலுவால் தனக்கு பல பிரச்சனைகள் வந்ததாகவும் அவர் என்னை வளரவிடவில்லை என்றும் கூறினார்.

இதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார் பிரேம பிரியா. அப்போது இந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்டபோது, “வடிவேலுவை குறித்து நான் தேவையில்லாமல் பேசவில்லை. நான் உண்மையைத்தான் கூறினேன். பல பேட்டிகளில் என்னிடம் கேட்டபோது அதை சொல்லவேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. அவர் என்னை கொஞ்சம் வளரவிட்டிருக்கலாம். இப்போது நான் மிகவும் கஷ்டப்படுகிறேன்” என மிகவும் சோகமாக கூறினார்.

மேலும் பேசிய அவர், “நிறைய படப்பிடிப்பிற்கு சென்று வடிவேலுவால் திரும்ப வந்திருக்கிறேன். பல திரைப்படங்களில் வடிவேலு என்னை வேண்டாம் என்று கூறியிருக்கிறார். சுறா படப்பிடிப்பில் இருந்த எல்லோருக்கும் இது தெரியும். நான் உண்மையைத்தான் கூறுகிறேன். பொய் பேசவில்லை.

நான் வடிவேலு குறித்து பேசியதற்கு மறுப்பு வீடியோ போடவேண்டும் என இரண்டு மூன்று மிரட்டல்கள் வந்தது. எனக்கு அதில் விருப்பமில்லை. ஒரு வேளை நான் மறுப்பு வீடியோ போட்டால் வடிவேலு எனக்கு பணம் கொடுத்துவிட்டார் என்று பலர் கூற நேரிடும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்