நடிகர் விஷால் இப்போது நடித்து வெளிவந்துள்ள படம் ரத்னம். டைரக்டர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த மூன்றாவது படம். ஏற்கனவே இவர் தாமிரபரணி, பூஜை என்ற இரண்டு படங்களில் நடித்த விஷால், 3வதாக இந்த படத்தில் நடித்துள்ளார். ரத்னம் படத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், யோகி பாபு, சமுத்திரகனி, முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் நேற்று ரிலீஸ் ஆனது. முதல் நாளிலேயே பல தியேட்டர்களில் கூட்டம் குறைவாக இருந்ததாகச் சொல்லப்பட்டது. இரண்டாவது நாளான இன்று ஓரளவு கூட்டம் இருந்தது. இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஓரளவுக்கு கூட்டம் காணப்பட்டது. நாளை ஞாயிறு தினம் என்பதால் இன்னும் கூட்டம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.முதல் நாள் வசூல் மூன்று கோடி ரூபாய் மட்டுமே ஆனதாக கூறப்படுகிறது. இது மாஸ் ஓபனிங் என்று கூற முடியாது.
ரத்னம் படம் டிக்கெட் விலை ரூ. 200 என்று இருந்த நிலையில், இந்த ஓப்பனிங் டிக்கெட் வசூல் என்பது விஷாலை பொருத்தவரை ஏமாற்றம் தரக்கூடியதாக தான் இருக்கிறது. எனினும் வரும் நாட்களில் இந்த படம் பிக்கப் ஆகுமா அல்லது தொடர்ந்து ரசிகர்கள் கூட்டமின்றி தியேட்டர்கள் காற்று வாங்குமா என்பது வரும் சில தினங்களில் தெரிந்து விடும்.
இதற்கிடையே நடிகர் விஷால் ரத்னம் படத்தில் நடிப்பதற்காக 25 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளனர். இதில் 10 கோடி ரூபாய் மட்டுமே விஷால் சம்பளமாக பெற்றுள்ளார். மீதி 15 கோடி எனக்கு சம்பளமாக வேண்டாம். அந்த 15 கோடி சம்பளத்தை கழித்துவிட்டு 10 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்றுள்ளார்.
இதற்கு பதிலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரத்னம் படம் வெளியிடும் உரிமைகளை பெற்றுக்கொள்கிறேன் என்று ஒப்பந்தம் பேசியிருக்கிறார். அதற்கு அவர்களும் ஒத்துக்கொண்ட நிலையில்தான், தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக வினியோகஸ்தர்களை நடிகர் விஷாலே அழைத்துப் பேசி இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலையை பார்த்திருக்கிறார். இதனால் மீடியேட்டர்களின் வெறுப்பையும் சம்பாதித்திருக்கிறார்.
ஆனால் இவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, கில்லி படம் நிறைய தியேட்டர்களில் நல்ல விதமாக ஓடிக்கொண்டிருப்பதால், விஷால் நடித்த ரத்னம் படத்துக்கு சரியான பெரிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் விஷால் நடிப்பும், வன்முறை காட்சிகளும், படத்தின் கதையும் சொதப்பலாக இருப்பதாக ஏற்கனவே விமர்சித்து வருகின்றனர். தியேட்டர்கள் உரிமைக்காக ரூ. 15 கோடியை கழிக்காமல் மொத்த பணமாக வாங்கியிருந்தால் லாபமாக இருந்திருக்கும். இப்போது அதிலும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்று தமிழ் சினிமா ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.





