நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்த படத்தின் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் மேற்பார்வையில் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இது ஒரு பான் இந்தியா படமாகவும் உருவாகியுள்ளது.
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தலைவர் 173 என்ற தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி அல்லது டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து 2 பேரில் ஒருவர் இயக்க வாய்ப்புள்ளது. இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனே ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்க உள்ளார்.
இந்த படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் ஒரு பான் இந்தியா படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தை முதலில் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் கூலி படம் சொதப்பியதால் அந்த வாய்ப்பு நெல்சனுக்கு போய்விட்டது.
சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி கமல் இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பன் உதயநிதி தான் தயாரிக்க உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் பிரமோ வீடியோ வெளியாகி வைரலானது. இதில் ரஜினி கமல் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் தமிழக அரசியல் களத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக படுதோல்வியடைந்து எதிர்கட்சியாக மாறியுள்ளது. தவெக கட்சி தலைவர் விஜய் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வியடைந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் சட்டசபை எதிர்கட்சி தலைவராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் கட்டுப்பாட்டில் தான் தமிழ் சினிமாவே இருப்பதாக ஒரு சர்ச்சை இருந்தது. அதனால் ரஜினி கமல் படம் உருவாகுமா என்ற கேள்வியும் குழப்பமும் ரசிகர்களுக்கு எழுந்தது. ஆனால் நிச்சயமாக இந்த படம் உருவாகும் என்றும், இந்த படத்தில் நடிக்க தனக்கான மேக்கப் சாதனங்களை வாங்க நடிகர் கமல் வெளிநாட்டுக்கு சென்றிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.





