- Advertisement -
Homeபொழுதுபோக்குவீட்டு வேலைகளை செய்வதில் ஆண் பெண் பாகுபாடு ஏன்? சமைப்பதும் வீட்டை சுத்தம் செய்வதும் பெண்களின்...

வீட்டு வேலைகளை செய்வதில் ஆண் பெண் பாகுபாடு ஏன்? சமைப்பதும் வீட்டை சுத்தம் செய்வதும் பெண்களின் வேலையா? – பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கேள்வி!

- Advertisement -

சமீபகாலமாக பெண்களுக்கான உரிமைகள் பெண்களுக்கான அடிப்படை தேவைகள் குறித்து பிரபல நடிகைகள் கருத்துகளை பேச துவங்கி விட்டனர். பொதுவாகவே பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்துகளை அவர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற கருத்துகள் இணையத்தில் வைரலாகின்றன. அந்த வகையில் பிரியங்கா சோப்ராவும் ஒரு முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்தி சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு யூத் என்ற படத்தில் நடிகர் விஜய் உடன் ஜோடியாக அவர் நடித்திருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வாரணாசி படத்தில் மகேஷ்பாபு மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோருடன் பிரியங்கா சோப்ரா இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா கூறியதாவது, பெண்கள்தான் வீட்டு பொறுப்புகளை நிர்வகிக்க வேண்டும் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆண்கள் பெரும்பாலும் அவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

வீட்டு வேலைகளை பாலினத்துடன் இணைக்க கூடாது. வீட்டை சுத்தம் செய்வதும் சமைப்பதும் பெண்களின் வேலையல்ல. அதற்கு பதிலாக பாலின பாகுபாடு பார்க்காமல் வயது வந்தோருக்கான அடிப்படை வேலை. சோம்பேறித்தனத்துடன் பாலினத்தை குழப்ப வேண்டாம். பொழுதுபோக்கு துறையை விட தொழில்நுட்பம் பெரிய அளவில் மாற்றி உள்ளது.

- Advertisement -

திரைப்பட தயாரிப்பு முன்பை விட எளிதாகி இருக்கிறது. நீங்கள் திரைப்பட தயாரிப்பில் இறங்க விரும்பினால் நீங்கள் எந்த துறையில் இருக்க விரும்புகிறீர்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். தொழில் துறையில் நுழைவது மிகவும் கடினமானது. டிஜிட்டல் பிளாட்பார்ம்கள் திரைப்பட தயாரிப்பு தொடர்பான யதார்த்தத்தை மாற்றிவிட்டது.

படைப்பாளிகள் பாரம்பரிய தொழில் கட்டமைப்புகளை நம்பாமல் நேரடியாக பார்வையாளர்களிடம் தங்களது கருத்துக்களை கொண்டு வர அனுமதிக்கிறது. இப்போது உங்களுக்கு ஒரு யோசனை இருப்பதாக உணர்ந்தால் அதை வீடியோவாக மாற்றி அதை யூடியூப்பில் வெளியிடலாம் என்றும் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்திருந்தார்.

- Advertisement -

சற்று முன்