கோலிவுட் சினிமாவில் மாநகரம் என்கிற படம் மூலம் அறிமுக இயக்குனராக தனது கால் தடைத்தை பதித்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தியின் நடிப்பில் கைதி என்கிற படத்தினை இயக்கி மிகப்பெரிய வெற்றியினை கொடுத்தார். கைதி படத்தினை பார்த்த அனைவரும் டைரக்ஷனில் இந்த இயக்குனர் மிகப்பெரிய உச்சத்தை தொடுவார் என்று அனைவரும் பேசி முடிக்கும் வேளையில் தனது மூன்றாவது படத்திலேயே மாபெரும் நடிகரான விஜய்யை வைத்து படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜ் பெற்றார்.

அந்த வகையில் விஜய்யை வைத்து அவர் இயக்கிய மாஸ்டர் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்ற வேளையில் நான்காவது படமாக உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தினை இயக்கி இருந்தார். முற்றிலுமாக சறுக்கி இருந்த கமலஹாசனின் திரைப்பயணம் விக்ரம் மூலம் மீண்டும் உச்சத்தை தொட்டது என்றால் அது மிகையல்ல.
அந்த அளவிற்கு பாக்ஸ் ஆபிஸில் உச்சகட்ட கலெக்ஷனை தொட்ட விக்ரம் படம் மீண்டும் கமலஹாசனை உலக நாயகனகவே உயர்த்தியது. அதோடு அதற்கடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்றால் எந்த படம் என்கிற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. அந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் வைத்து லியோ படத்தினை கிட்டத்தட்ட முடித்து வைத்துள்ளார்.

எதிர்வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கும் இந்த திரைப்படமானது தற்போதே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது, ஏற்கனவே பல்வேறு நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்துள்ள இந்த திரைப்படமானது எவ்வளவு பெரிய சாதனையை படைக்கப்போகிறது என்பதே அனைவரது எதிர்பாக்கவும் உள்ளது.
இதில் வழக்கம் போலவே லோகேஷ் கனகராஜ் படத்தில் கதாநாயகிகள் இறப்பதாக காட்டப்படும் காட்சிகளின் அடிப்படையில் இந்த லியோ படத்திலும் திரிஷா இறந்து விடுவாரா? என்று ஒரு நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜிடம் ரசிகர்களின் வேண்டுகோளின் படி ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் கூறுகையில் : இந்த படத்தில் திரிஷாவிற்கு எதுவும் ஆகாது என்று பதில் அளித்ததால் அதன் பிறகு தற்போது த்ரிஷாவின் ரசிகர்கள் அனைவரும் நிம்மதி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





