- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் கணவர் அப்படி சொன்னதும் என் பையன் அப்செட் ஆகி விட்டான் - நடிகர் விஜய்...

என் கணவர் அப்படி சொன்னதும் என் பையன் அப்செட் ஆகி விட்டான் – நடிகர் விஜய் குறித்து ஓபனாக பேசிய நடிகை ரம்பா!

- Advertisement -

கடந்த 1990களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரம்பா. சுந்தர் சி இயக்கிய உள்ளத்தை அள்ளித் தா படத்தில் நடிகர் கார்த்திக் ஜோடியாக நடித்து பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தொடர்ந்து அருணாசலம் காதலா காதலா ஜானகிராமன் நினைத்தேன் வந்தாய் ராசி என பல படங்களில் நடித்தார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் நிறைய படங்களில் ரம்பா நடித்தார். ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் பிரபு கார்த்திக் சத்யராஜ் சரத்குமார் என பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த ரம்பா திருமணம் செய்துக்கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார்.

- Advertisement -

பல ஆண்டுகளாக கணவர் பிள்ளைகள் குடும்பம் என இருந்து வந்த ரம்பா, இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க தயாராகி விட்டார். இதற்காக சில இயக்குனர்களிடம் அவர் கதை கேட்டு வருகிறார். ஏற்கனவே டிவி சேனல்களில் ரியாலிடி ஷோக்களில் ரம்பா நடுவராக பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜயுடன் மின்சார கண்ணா நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட படங்களில் ரம்பா நடித்திருந்தார். இதில் மின்சார கண்ணா படத்தில் விஜய்க்கு அவர் ஜோடி இல்லை. அதே போல் நினைத்தேன் வந்தாய் படத்தில் தேவயானி ரம்பா இருவரும் நாயகிகளாக இருந்தும் கடைசியில் விஜய் ரம்பாவை தான் திருமணம் செய்துக்கொள்வார். நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக மாறி விட்டார்.

- Advertisement -

வருகிற சட்டசபை தேர்தலில் அவர்தான் ஜெயித்து தமிழகத்தின் முதல்வராக அமர்வார் என்று பலரும் பரபரப்பாக பேசி வருகின்றனர். விஜய் செல்லும் இடம் எல்லாம் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதுவதே அதற்கு சாட்சியாக உள்ளது. இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை ரம்பா கூறியதாவது, என் பையன் விஜய் சாரோட மிகப்பெரிய ரசிகன். நான் விஜய் கூட நடிச்சது அவனுக்கு தெரியாது.

ஒரு முறை என் கணவர் அவன் கிட்ட பேசும்போது, உன் அம்மா நடிகர் விஜயோட நடிச்சிருக்காங்கன்னு சொன்னார். அப்போது அதைக்கேட்டு அவன் அதிர்ச்சி ஆகிவிட்டான். பிறகு ஒரு நாள் விஜய் சார் கிட்ட கேட்டு அவர்கிட்ட சந்திக்க நேரம் வாங்கி அவரை நேரில் சந்தித்து பேசினோம். என் பையனோட ரொம்பவும் அன்பாக விஜய் பழகினார். என் மகன் அவரோடு இருந்த போது ரொம்பவும் சந்தோஷமாக இருந்தான் என்று நடிகை ரம்பா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்