பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்து ரசிகர்களின் மனதில் நிலைத்து நின்றவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு படையப்பா படத்தில் வில்லி கேரக்டரில் நடித்து பெரிய அளவில் ரசிகர்களின் பாராட்டை பெற்றவர். நடிகை ரம்யா கிருஷ்ணன் மறைந்த நடிகர் சோ ராமசாமியின் சகோதரி மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிவண்ணன் இயக்கத்தில் முதல் வசந்தம் படத்தில்தான் ரம்யா கிருஷ்ணன் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் பாண்டியனுக்கு ஜோடியாக, மலேசியா வாசுதேவனுக்கு மகளாக நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து படிக்காதவன் போன்ற பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தார். படையப்பா படம்தான் ரம்யா கிருஷ்ணனுக்கு மிகப்பெரிய அடையாளத்தை அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் நிறைய படங்களில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கிறார். அதில் குறிப்பாக ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவி கேரக்டரில் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. இந்த படத்தில் நடித்த பிரபாஸ் அனுஷ்கா மட்டுமின்றி சத்யராஜ் ரம்யா கிருஷ்ணன் போன்றவர்களுக்கும் இந்த படம் பெரிய வரவேற்பை கொடுத்தது.
டிவி சேனல்களில் நடக்கும் ரியாலிடி ஷோக்களில் அவ்வப்போது ரம்யாகிருஷ்ணன் நடுவராக பங்கேற்று இருக்கிறார். தங்க வேட்டை என்ற நிகழ்ச்சியை அவரே தொகுத்தும் வழங்கி இருக்கிறார். சில டிவி சீரியல்களிலும் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட போது அவருக்கு பதிலாக சில வாரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் நடத்தியதும் கவனிக்கத்தக்கது.
ஆனால் சமீபகாலமாக ரம்யா கிருஷ்ணன் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. டிவி சீரியல்களிலும் நடிக்கவில்லை. அதே போல் நடுவராகவும் டிவி நிகழ்ச்சிகளில் காண முடியவில்லை. கடைசியாக ரம்யா கிருஷ்ணன் ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்தார். அடுத்து ஜெயிலர் 2 படத்திலும் அவர் நடிக்க அதிக வாய்ப்புள்ளது.
இந்த சூழலில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் மாதம் வருமானம் ரூ. 5 கோடி என தெரிய வந்துள்ளது. படத்தில் சீரியலில் நடிக்காமலேயே ரூ. 5 கோடி வரை எப்படி வருமானம் வருகிறது என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். ஐதராபாத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு சொந்தமாக 3 நகைக்கடைகள் உள்ளன. கேரளாவில் சொந்தமாக 5 பியூட்டி பார்லர்கள் இருக்கின்றன. நிறைய விளம்பர படங்களிலும் வருகிறார். அந்த வகையில் மாதம் ரூ. 5 கோடி வரை அவருக்கு வருமானம் கிடைத்து வருகிறது. இந்த தகவலை நடிகை ரம்யாகிருஷ்ணன் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.





