- Advertisement -
விஜய் டிவியில் தமிழ் பிக்பாஸ் சீசன் 10 நடந்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 6ம் தேதி துவங்கிய இந்த 10வது சீசன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். சனி மற்றும் ஞாயிறு தினங்களில் அவர் பங்கேற்ற நிலையில் கடந்த வாரத்தில் உடல் நிலை சரியில்லாத நிலையில் சரியாக பேச முடியாமல் சிரமப்பட்டார். இந்த நிலையில் இன்றும் நாளையும் ஒளிபரப்பாகும் விஜய் டிவி பிக்பாஸ் தமிழ் சீசன் 10ல் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க உள்ளார். ஏற்கனவே நடிகர் கமல் தொகுப்பாளராக இருந்த போது உடல் நலம் பாதிக்கப்பட்ட நேரத்தில் இதே போல் நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.





