இந்திய சினிமா ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என கொண்டாடப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் அறிமுகமான இவர் தெலுங்கில் கீதாகோவிந்தம் படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக விஜய தேவரகொண்டா நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.
தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா புஷ்பா 2 படங்களும் நாயகியாக அதில் நடித்த ராஷ்மிகாவுக்கு மிகப்பெரிய பாராட்டை பெற்றது. இந்த படங்கள் அவரை இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. தொடர்ந்து இந்தியிலும் அனிமல் என்ற படத்தில் ராஷ்மிகா நடித்து பாலிவுட் ரசிகர்களை கவர்ந்தார்.
இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் படுக்கையறை காட்சிகளிலும் முத்தக்காட்சிகளிலும் நடிகை ராஷ்மிகா மந்தனா தாராளமாக நடித்தது ரசிகர்களின் மனங்களை கிறங்கடித்தது. அதன்பிறகுதான் அவர் நேஷனல் கிரஷ் நடிகை என்று அழைக்கப்பட்டார். தொடர்ந்து இந்தி தெலுங்கு தமிழ் படங்களில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் விமான நிலையத்திற்கு நடிகை ராஸ்மிகா விமானத்தில் செல்வதற்காக வருகை தந்தார். அப்போது ராஷ்மிகாவை புகைப்படக் கலைஞர்கள் சூழ்ந்து கொண்டு பரபரப்பாக புகைப்படங்களை எடுத்தனர். அப்போது அவர் வேகமாக நடந்து சென்றார்.
அப்போது அவருக்கு பின்னால் சென்ற ஒருவர் அருகில் இருந்த ஒரு வாலிபரை காட்டி இவருக்கு இன்று பிறந்தநாள் என்று கூறினார். அவரும் கையில் கேமராவுடன் ராஷ்மிகாவை துரத்தி துரத்தி போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தார். அதைக் கேட்டு ஒரு நொடி அப்படியே நின்ற ராஷ்மிகா அந்த போட்டோகிராபரை தனக்கு அருகில் வருமாறு அழைத்தார்.
அந்த போட்டோகிராபரை திடீரென கட்டிப்பிடித்த ராஷ்மிகா, காட் பிளஸ் யூ என்று தனது வாழ்த்துகளை சொன்னார். அவரிடம் உங்களுக்கு இப்போது என்ன வயது, இது எத்தனை ஆண்டு பிறந்தநாள் என்றும் ராஷ்மிகா கேட்டார். அவர் சற்று வெட்கத்துடன் 24 என்று சொன்னார். உடனே ஐயோ என்று க்யூட் ஆக ஒரு ரியாக்சன் தந்தபடி அங்கிருந்து நடிகை ராஸ்மிகா மந்தனா சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.





