- Advertisement -
Homeபொழுதுபோக்குசந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றம்... ரசிகர்கள் அதிர்ச்சி அடைவார்கள் என நம்பி,...

சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றம்… ரசிகர்கள் அதிர்ச்சி அடைவார்கள் என நம்பி, தப்பு கணக்கு போட்டதா படக்குழு…

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் – இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கூட்டணியில் வெளியான பாட்ஷா மற்றும் அண்ணாமலை திரைப்படங்கள் வசூலில் புதிய சாதனையை படைத்தன. இன்றளவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் இந்த இரண்டு திரைப்படங்களையும் பார்ப்பதற்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக உருவான பாபா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. ரஜினிகாந்தின் கேரியரிலேயே படுமோசமான விமர்சனத்தை இந்த திரைப்படம் பெற, அடுத்த படத்திற்கான தேர்வில் மிகுந்த கவனமாக நடிகர் இருந்தார். இந்த சமயத்தில், பி வாசு உடன் ரஜினிகாந்த் இணைய சந்திரமுகி திரைப்படம் உருவானது.

- Advertisement -

இதில், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்ட ஏராளமானோர் நடித்தனர். சந்திரமுகியாக நடித்த ஜோதிகா திரையரங்குகளில் கைத்தட்டல்களை அள்ளினார். வடிவேலு காமெடியும் படத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ரஜினிகாந்த் தூணாய் நின்று படத்தை தூக்கிப் பிடிக்க, சந்திரமுகி திரைப்படம் 700 நாட்களைக் கடந்து ஓடியது.

அது மட்டுமல்லாமல் வசூலிலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய சாதனையை படைத்தது. 2005 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகியாக கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். லைகா நிறுவனம் இதனை தயாரித்துள்ளது

- Advertisement -

ராதிகா, வடிவேலு உள்ளிட்டவரும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளனர். தென்னிந்திய அளவில் பான் இந்தியா திரைப்படமாக சந்திரமுகி 2 எடுக்கப்பட்டுள்ளது. இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. அது மட்டுமல்லாமல் டிரைலரில் ராகவா என்ற பெயர் மட்டுமே இருப்பதாகவும், லாரன்ஸ் பெயர் எங்கே போனது என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் சந்திரமுகி திரைப்படம் வரும் 15ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், தற்போது திடீரென ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சில தொழில்நுட்ப காரணங்களால் படம், வரும் 28ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் ஜெயம் ரவியின் இறைவன், சித்தார்த்தின் சித்தா, விஜய் ஆண்டனி ரத்தம் உள்ளிட்ட படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்