கன்னட சினிமாவில் நடித்து அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் நடிகர் விஜய் தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம் படம் அவருக்கு நல்ல ஒரு அடையாளத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து சீதாராமம் புஷ்பா போன்ற படங்களில் நடித்து அவர் மிகவும் பிரபலமானார். குறிப்பாக புஷ்பா படம் அவரை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சென்று சேர்த்தது.
அதன்பிறகு தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு ஆகிய 2 படங்களில் நடித்தார். அந்த 2 படங்களுமே பெரிய வெற்றியை பெறாத நிலையில் தமிழில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் இல்லை. அதே நேரத்தில் இந்தியில் அனிமல் படத்தில் நடித்து அவர் பெரிய அளவில் கவனத்தை பெற்றார். அதன்பிறகுதான் நேஷனல் கிரஷ் என்கிற பட்டம் அவருக்கு கிடைத்தது.
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பிரபலங்களை டிரோல் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சினிமா நடிகர் நடிகைகளை சமூக வலைதளங்களில் டிரோல் செய்து வருவது சமீபகாலமாக மிகவும் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இதில் முன்னணி கதாநாயகிகள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதில் அவர்கள் ஆபாசமாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். இதுபற்றி ராஷ்மிகா கூறியதாவது, என்னைப் பற்றி எதிர்மறையான கருத்துக்கள் வரும்போது சில நண்பர்கள், நீங்கள் ஏன் பதில் சொல்லவில்லை? என்று என்னிடம் கேட்கிறார்கள். இந்த டிரோல்களுக்கு எல்லாம் பதில் சொல்வதால் எந்த பயனும் இல்லை.
பொய்களை பரப்புவோர் தொடர்ந்து அதையே தான் செய்துகொண்டு இருப்பார்கள். மக்கள் தங்களுக்கு பிடித்ததை மட்டுமே கேட்க விரும்புகிறார்கள். பொய்யான வதந்திகளை பார்த்து இது உண்மை இல்லை என்று நான் ஏன் விளக்கம் தர வேண்டும்? வதந்திகளை பரப்புவோருக்கு பதில் அளித்தால் அவர்களை ஊக்குவிப்பது போல ஆகிவிடும்.
அதனால் நான் ஏன் அதைச் செய்ய வேண்டும்? சிலர் பணத்திற்காகவே பொய்யான பிரச்சாரங்களை செய்கிறார்கள். நான் பணம் சம்பாதிப்பதற்காக நடிக்கிறேன். சினிமாவுக்குள் வந்தபோது எப்படி இருந்தேனோ அதேபோல் தான் இன்றும் இருக்கிறேன். முகம் தெரியாதவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று நடிகை ராஷ்மிகா மந்தனா அதில் கோபமாக கூறியிருக்கிறார்.





