- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் நயன்தாரா ஆவணப்பட விவகாரம்; இன்று விசாரணைக்கு வந்த வழக்கு - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

தனுஷ் நயன்தாரா ஆவணப்பட விவகாரம்; இன்று விசாரணைக்கு வந்த வழக்கு – அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

- Advertisement -

யாரடி நீ மோகனி படத்தில் நடிகர் தனுஷ், நயன்தாரா இணைந்து நடித்திருந்தனர். சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல் படத்தில் ஒரு ஐட்டம் பாட்டுக்கு தனுஷ், நயன்தாரா குத்தாட்டம் போட்டிருந்தனர். தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். விஜய் சேதுபதி, நயன்தாரா, ராதிகா உள்ளிட்டோர் அந்த படத்தில் நடித்திருந்தனர்.

நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது, படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகள் கழித்து இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். அந்த திருமண ஆல்ப வீடியோவை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டனர்.

- Advertisement -

அதில் நானும் ரவுடிதான் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட சில காட்சிகளை பயன்படுத்தியதாக படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். நடிகை நயன்தாரா, அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளம் மீது வழக்கு தொடுத்த தனுஷ், ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் மும்பையைச் சேர்ந்த நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக தனுஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, படத்தில் நயன்தாராவின் நடிப்பு, குரல் எங்கள் நிறுவனத்திற்கு சொந்தமானது.

- Advertisement -

தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் எங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான வீடியோ காட்சிகளுடன் நயன்தாரா திருமண வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது. அதனால் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இழப்பீடாக 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தனுஷ் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் சென்னை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர முடியாது என்பதால் வழக்கை நிராகரிக்க கோரி நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை ஏற்க நீதிபதி மறுத்தார். மேலும் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கை வரும் பிப்ரவரி 5ம் தேதி பட்டியலிடவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்