தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தியாகராஜன். கொம்பேறி மூக்கன் தீச்சட்டி கோவிந்தன் நீங்கள் கேட்டவை மலையூர் மம்பட்டியான் என பல படங்களில் ஹீரோவாக நடித்தவர். அவரது மகன் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் கதாநாயகியாக காவேரி நடித்திருந்தாா். தேனிசை தென்றல் தேவா இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாக இருந்தன. ஜனகராஜ் குமரிமுத்து காமெடி இந்த படத்துக்கு பெரிய பிளஸ் பாயிண்டாக இருந்தது. வழக்கமான காதல் கதை என்றாலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
வைகாசி பொறந்தாச்சு படத்தை தொடர்ந்து நடிகர் பிரசாந்த் ஹீரோவாக நடித்த படம் செம்பருத்தி. இந்த படத்தை இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கி இருந்தார். இதில்தான் நடிகை ரோஜா நாயகியாக அறிமுகமானார். சீனியர் நடிகை பானுமதி ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது.
சமீபத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்கும் புதிய படத்தின் விழா நடந்தது. இந்த விழாவில் பெப்ஸி அமைப்பின் தலைவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி பேசியதாவது, நடிகர் பிரசாந்த் என்னுடைய செம்பருத்தி படத்தில் நடித்தார். அந்த படத்தில் ஒரு முக்கியமான பாட்டி கேரக்டரில் சீனியர் நடிகை பானுமதி நடித்தார்.
படத்தில் ஒரு காட்சியில் பிரசாந்த் பானுமதி பேசிக்கொண்டிருப்பது போன்ற காட்சியை படமாக்கினேன். மானிட்டர் பார்த்துவிட்டு டேக் போனோம். அப்போது பானுமதி பேசுவதற்கு பிரசாந்த் ரியாக்சன் காட்டி பேச வேண்டும். ஆனால் திடீரென பிரசாந்த் ரியாக்சன் காட்டி பேசவிடாமல் பானுமதி அவரை கட்டிப் பிடித்து விட்டார்.
அந்த காட்சியில் அவரது டாமினேஷன் அதிகமாக இருக்க வேண்டும் என்று அவர் அப்படி செய்துவிட்டார். அது எனக்கும் தெரியாது. பிரசாந்துக்கும் தெரியாது. வேறு யாராக இருந்தாலும் தடுமாறி இருப்பார்கள். கட் சொல்லி இருப்பார்கள். ஆனால் பிரசாந்த், பானுமதியை திடீரென தள்ளி விட்டு உங்களுக்கு தெரியாது பாட்டி என அவரே ஒரு சொந்த வசனத்தை பேசி தனது ரியாக்சனை காட்டினார். பானுமதியவே ஓவர் டேக் பண்ணிட்டே, நீ பெரிய டைரக்டர் ஆவே என்று நான் அப்பேதே பிரசாந்தை பாராட்டினேன் என்று ஆர்கே செல்வமணி கூறியிருக்கிறார்.





