- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்களில் பேசி பப்ளிசிடி தேடிக்கொள்கிறார்களா சில நடிகைகள்? நடிகை ரோகிணி பேச்சால்...

பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்களில் பேசி பப்ளிசிடி தேடிக்கொள்கிறார்களா சில நடிகைகள்? நடிகை ரோகிணி பேச்சால் பரபரப்பு

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ரோகிணி. இவர் மறைந்த வில்லன் நடிகர் ரகுவரனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. பவுனு பவுனுதான், மகளிர் மட்டும், விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். இவர் சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட். பல நடிகைகளுக்கு ரோகிணி பின்னணி குரல் பேசியிருக்கிறார்.

கடந்த 2019ம் ஆண்டில், தமிழ் சினிமா நடிகைகளுக்கு என பாதுகாப்பு கமிட்டி உருவாக்கப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளாக தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. அந்த கமிட்டியில் ரோகிணி தலைவராக இருக்கிறார். குஷ்பு, சுகாசினி உள்ளிட்டோர் அதில் முக்கிய பொறுப்புகளில் இருக்கின்றனர்.

- Advertisement -

தற்போது, கேரளாவில் மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தில் விவகாரம் பூதாகரமாக மாறியுள்ள நிலையில், இன்று தமிழ் சினிமா துறையிலும் அது எதிரொலிக்க துவங்கியிருக்கிறது. இந்த சூழலில் இன்று சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்துள்ளது.

இதில் நடிகை ரோகிணி பேசியதாவது, கடந்த 2019ம் ஆண்டிலேயே பெண்களுக்கான பாதுகாப்பு கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர், நடிகைகள் மட்டுமின்றி பாதிக்கப்படும் யாரும் புகார் தரலாம். பாலியல் புகார்கள் குறித்து ஊடகங்களில் யாரும் பேச வேண்டாம். நடிகர் சங்கத்தில் புகார் கொடுங்கள்.

- Advertisement -

வழக்கறிஞர்கள், மனநல ஆலோசகர்கள், தன்னார்வலர்களும் இந்த கமிட்டியில் உள்ளனர். பாலியல் புகாரில் சிக்குபவர்கள் 5 ஆண்டுகள் வரை சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்படும். புகார் குறித்து வெளியே தெரிவிக்கப்படாது. எந்த பெண்ணும் பயப்படக் கூடாது. எந்த நடிகையும் புகார் அளிக்கலாம்.

நடிகை மீதான புகார் பெரிதுப்படுத்தப்படுகிறது. நடிகை குறித்த புகார் மட்டுமே திரும்ப திரும்ப பேசப்படுகிறது என்று கூறியிருக்கிறார். அதாவது கமிட்டியில் தரும் புகார்கள் ரகசியம் காக்கப்படும். பாலியல் விவகாரங்களை நடிகைகள் ஊடகங்களில் பேசி பப்ளிசிடி தேட வேண்டாம் என்று ரோகிணி வலியுறுத்தி இருக்கிறார். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் வந்த புகார்களை ரகசியமாக பேசி தீர்த்து வைத்திருக்கிறோம். இந்த பிரச்னைகளை பப்ளிசிடி செய்யக் கூடாது என்பதே இந்த கமிட்டியின் தன்மை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்