பிக்பாஸ் வீட்டில் கடைசியாக 6 போட்டியாளர்கள் மட்டுமே இருந்த நிலையில் நேற்று இந்த 9வது சீசனில் கலந்துக்கொண்டு வெளியேற்றப்பட்ட முன்னாள் போட்டியாளர் வியானா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். அவர் பேசிய விதத்தால் மிகவும் வருத்தப்பட்ட விக்கல்ஸ் விக்ரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறி அழுதார்.
வியானா இழிவாக பேசி தன்னை மிகவும் அவமானப்படுத்துவதாக கன்பெக்சன் ரூமில் உட்கார்ந்துக்கொண்டு அழுத விக்கல்ஸ் விக்ரமுக்கு பிக்பாஸ் பல ஆறுதல்களை கூறி அவரை தேற்றினார். அப்போதும் அவர் தனது வீட்டுக்கு செல்வதாக அடம்பிடிக்க நீங்கள் என்னுடைய ஸ்வீட் பாய் சாக்லேட் பாய் என்று சொல்லி பிக்பாஸ் அவரை தேற்றி வீட்டுக்குள் அனுப்பி வைத்தாா்.
இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் முன்னாள் போட்டியாளர்கள் நடிப்பு அரக்கன் தர்பீஸ் திவாகரும் இயக்குனர் பிரவீன் காந்தியும் வந்தனர். அவர்கள் இருவரையும் பார்த்தவுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தவர்கள் மிகவும் உற்சாகமாகி அவர்களை வரவேற்றனர். அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டனர்.
அப்போது வெளியே நடந்த பல விஷயங்களை குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து வாட்டர்மெலன் திவாகர் பேசிக்கொண்டே இருந்தார். அவரிடம் பேசிய பிக்பாஸ், வெளியில் நடந்த விஷயங்களை வீட்டுக்குள் பேச வேண்டாம் திவாகர். அப்படியும் நீங்கள் பேசினால் அங்க மெயின் டோர் தெரியுது பாருங்க. அது வழியா போகச் சொல்லிடுவேன் என்று எச்சரித்தார். மீண்டும் நீங்க வந்தது எண்டர்டெயின்மென்ட் பண்ண தான். அதை மட்டும் பண்ணுங்க என்றும் அறிவுறுத்தினார்.
வியானா பிரவீன் காந்தி வாட்டர்மெலன் திவாகர் ஆகியோரை தொடர்ந்து முன்னாள் போட்டியாளர் பிரவீன் ராஜூம் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். இவர் யாருமே எதிர்பாராத தருணத்தில் திடீரென எவிக்ட் ஆகி வீட்டை விட்டு வெளியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரவீன் ராஜ் வீட்டுக்குள் வந்த ஒரு பிரமோ இப்போது வெளியாகி உள்ளது. அதில் கானா வினோத் மற்றும் பிரவீன் ராஜ் இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்கின்றனர்.
அப்போது பிரவீன் ராஜ், கானா வினோத்தை பார்த்து நான் 33 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களிடம் பெற்ற பெயரை நீ 90 நாட்கள் இந்த வீட்டில் இருந்தும் வாங்க முடியலடா என்று கோபமாக கூறுகிறார். இப்படி முன்னாள் போட்டியாளர்களின் வருகை பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் சண்டை சச்சரவுகளை உருவாக்கி மீண்டும் பிக்பாஸ் வீட்டை பரபரப்பான பகுதியாக மாற்றி வருகிறது.





