தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை ரோஜா. செம்பருத்தி என்ற படத்தில் அறிமுகமான அவர் சூரியன் இந்து உழைப்பாளி வீரா தமிழ் செல்வன் மக்களாட்சி பரம்பரை உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ஆயுதபூஜை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
இயக்குனர் ஆர்கே செல்வமணியை காதல் திருமணம் செய்துக்கொண்டு ஆந்திராவில் செட்டிலான நடிகை ரோஜாவுக்கு மகன் மகள் உள்ளனர். மேலும் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் ரோஜா எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை ரோஜா தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தார். ஆனால் நடிகர் விஜயுடன் மட்டும் தமிழில் அவர் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய நெஞ்சினிலே என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் விஜயுடன் ரோஜா நடனம் ஆடியிருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, நான் விஜயுடன் படத்தில் ஜோடியாக நடிக்கவில்லை. ஆனால் ஒரு பாடல் காட்சியில் மட்டும் அவருடன் நடனம் ஆடியிருக்கிறேன். டைரக்டர் எஸ்ஏ சந்திரசேகர் சார் என்னிடம் ஒரு பாட்டு மட்டும் பண்றீங்களா என்று கேட்டிருந்தார். ஓகே சொல்லி விட்டேன். சூப்பர் சாங் அது. தங்க நிறத்துக்கு தான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா என்று வரும்.
ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு விஜய் வந்தால் ஷாட்டில் நடிப்பார். நடித்து முடித்தவுடன் சுவரை பார்த்து சேரை போட்டுக் கொண்டு அமைதியாக உட்கார்ந்து விடுவார். யாரிடமும் எதுவும் பேச மாட்டார். அப்போ முதல் நாள் ஷூட்டிங். அப்போ அவங்க அப்பா, என்னம்மா விஜய் உங்ககிட்ட பேசினாரா என்று கேட்டார். எனக்கு என்ன தெரியும்? இல்லே சார்ன்னு யதார்த்தமாக சொல்லிட்டேன்.
நேரா விஜய் கிட்ட அவர் போய், என்ன விஜய் நம்ம படத்துக்கு மேடம் வந்து நடிச்சிட்டு இருக்காங்க, அவங்களுக்கு நீ விஷ் பண்ணலையா? என்று கோபமாக கேட்டு விட்டார். எனக்கு பக் என்று ஆகி விட்டது. என்னமோ நாம போட்டுவிட்ட மாதிரி ஆயிடுச்சேன்னு பயந்துட்டேன். இல்லேப்பா இல்லேப்பா என்று விஜய் சொன்னார். போய் மேடத்துக்கு விஷ் பண்ணு என்று விஜயிடம் எஸ்ஏ சந்திரசேகர் சொன்னார் என்று நடிகை ரோஜா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





