- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த ஹீரோ முதலமைச்சர் ஆகணும் என்று நான் ஆசைப்பட்டேன், அவர் நடிச்சு சம்பாதிச்ச பணத்துல நிறைய...

அந்த ஹீரோ முதலமைச்சர் ஆகணும் என்று நான் ஆசைப்பட்டேன், அவர் நடிச்சு சம்பாதிச்ச பணத்துல நிறைய உதவிகள் செய்தார் – நடிகை ரோஜா ஓபன்டாக்!

- Advertisement -

விளம்பரத்துக்காக நலத்திட்ட உதவிகளை செய்யும் பல பணக்காரர்கள் இருக்கின்றனர். சில ஹீரோ நடிகர்களும் அப்படித்தான். உதவி செய்வதை வீடியோவாக புகைப்படங்களாக இணையத்தில் வைரலாக்கி, தங்களுடைய உதவியை கூட விளம்பரப்படுத்தி புகழ் தேடிக்கொள்வார்கள்.

ஆனால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், பிறருக்கு உதவுவதை வெளியே சொல்லவே மாட்டார். ஆனால் அவரிடம் உதவி பெற்றவர் யாராக இருந்தாலும் எம்ஜிஆரின் பொன்னான குணத்தை வள்ளல் பண்பை வெளியே சொல்லாமல் இருக்க முடியாது. அப்படிதான் எம்ஜிஆரின் உதவிகள் வெளிச்சத்துக்கு வந்தது. அதே போல் தன்னால் இயன்ற வரையில் ஏராளமான உதவிகளை செய்தவர் கேப்டன் விஜயகாந்த்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, விஜயகாந்த் சார் இப்போது இல்லை என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவர் இன்னும் அங்கேயே தான் இருக்கார். பக்கத்துல தான் இருக்கிறார். நாளைக்கு பார்த்துக்கலாம் நாளைக்கு பார்த்துக்கலாம் நாளைன்னிக்கு பார்க்கலாம் என்ற ஒரு ஃபீலிங்குல தான் இருக்கோம் நாங்க.

ஏன்னா அவரோட குணம் அப்படி. பழகுற விதம் அப்படி. ரொம்பவும் அப்பாவியான ஒரு மனிதர் அவர். அவரோட அந்த உண்மையான சிரிப்பை எப்போதுமே மறக்க முடியாது. எப்பவும் எல்லாரோடும் ரொம்ப அபெக்சனா இருப்பாங்க. எப்பவுமே அவரை என்னால் மறக்க முடியாது.

- Advertisement -

அவர் இருக்கிறார் என்றுதான் எல்லோருமே நினைக்கிறோம். அவர் எங்களை போன்றவர்களின் மனங்களில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார். நம்ம இதயத்தில் இருக்கிறார். நம்முடைய நினைவுகளில் இருக்கிறார். எப்படியும் அவரது படங்களை பார்க்கும் போது அவரது ஞாபகம் இருந்துக்கிட்டே இருக்கும்.

அவர் இருந்திருந்தால் ஒருவாட்டியாவது அவர் முதலமைச்சர் ஆனால் நல்லா இருக்கும் என்று நான் ஆசைப்பட்டேன். ஏனென்றால் நல்ல மனசு உள்ள ஒரு மனுசன். நிறைய பேருக்கு நல்லது செஞ்சிருக்காங்க. அவர் ஹீரோவா சம்பாதிச்ச நிறைய காசை நிறைய உதவி பண்ணியிருக்காங்க என்று அந்த நேர்காணலில் நடிகை ரோஜா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்