- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது தொகுதிக்கு ஸ்டாலின் நிறைய நல்லது செய்தும் அவரை ஏன் தோற்கடிச்சாங்க? ஜனங்க சினிமாவுக்கு தான்...

தனது தொகுதிக்கு ஸ்டாலின் நிறைய நல்லது செய்தும் அவரை ஏன் தோற்கடிச்சாங்க? ஜனங்க சினிமாவுக்கு தான் ஓட்டு போட்டாங்களா? – நடிகை ரோஜா கேள்வி!

- Advertisement -

கடந்த தமிழக சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் விஎஸ் பாபு என்பவர் வெற்றி பெற்றார். கடந்த 15 தினங்களாக அவர் உடல் நலக்குறைவால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். இன்று முதல்வர் விஜய் அவரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார்.

இந்த நிலையில் கொளத்தூர் தொகுதிக்கு ஒரு எம்எல்ஏவாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் நிறைய அடிப்படை வசதிகளை செய்து தந்திருக்கிறார். நிறைய வளர்ச்சி திட்ட பணிகள் கொளத்தூரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் புதுமுக தவெக வேட்பாளர் விஎஸ் பாபு வெற்றி பெற்ற நிலையில் தனது சொந்த தொகுதியில் ஸ்டாலின் வெற்றியை நழுவ விட்டிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்த சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, ஸ்டாலின் சார் விஷயத்தில் எனக்கு ஒண்ணு புரியலே. அவரது தொகுதியை நான் நேரில் பார்த்தேன். அவர் அழகா சூப்பரா டெவலமென்ட் பண்ணி அந்த இடத்தில் ஒரு புதுமுகத்திடம் தோல்வியடைந்தது எனக்கு புரியலே.

ஜனங்க வந்து சினிமாவுக்கு ஓட்டுப் போட்டாங்களா? எதுக்கு வெறுத்தாங்க? ஒரு ஆள் சிஎம்மா வேண்டாம் என்று நினைச்சா அது வேற விஷயம். ஒரு 5 வருஷம் இவங்க இருந்தாங்க, அடுத்த 5 வருஷம் அந்த கட்சி இருக்கட்டும் என்று நினைப்பது சாதாரணமாக நடக்கிற விஷயம். இது எல்லா மாநிலத்திலும் நடக்கிற நார்மல்தான்.

- Advertisement -

ஆனால் ஒருத்தர் வந்து நம்மளுக்காக இவ்வளவு நல்லது பண்ணினத்துக்கு அப்புறமும் அவரை ஏன் தோற்கடிச்சாங்க என்று தெரியலே. அது எனக்கு ஒரு கேள்விக்குறியாக தான் இருக்கிறது. அவர் தப்பு செஞ்சார் என்றால் எல்லா அரசியல்வாதிகிட்டேயும் தப்பு இருக்கும். பிளஸ்சும் இருக்கும்.

எவ்வளவு தப்பு இருக்கு? எவ்வளவு பிளஸ் இருக்கு என்பதை லோக்கலில் இருக்கிற மக்கள்தான் டிசைட் பண்ண முடியும். வெளியில் இருந்து நமக்கு தெரியாது என்று நடிகை ரோஜா அந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். ஸ்டாலின் நல்லது செய்தும் தொகுதி மக்கள் அவருக்கு தோல்வியை தந்தது ஏன் என்ற அவரது கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்