- Advertisement -
Homeபொழுதுபோக்குமாஜி ஹீரோயினுக்கு வந்த திடீர் ஆசை, அந்த நடிகருடன் இப்படி ஒரு கேரக்டரில் நடிக்கணுமாம் -...

மாஜி ஹீரோயினுக்கு வந்த திடீர் ஆசை, அந்த நடிகருடன் இப்படி ஒரு கேரக்டரில் நடிக்கணுமாம் – அந்த இளம் நடிகர் இதுக்கு சம்மதிப்பாரா?

- Advertisement -

சினிமாவில் பல ஆண்டுகள் நீடித்திருந்தாலும் சில நடிகர்கள், சில நடிகைகளுடன் நடிக்க ஆசைப்படுவர். அதேபோல் சில நடிகைகளும், சில நடிகர்களுடன் நடிக்க ஆசைப்படுவர். ஆனால், சந்தர்ப்ப சூழலால், அவர்கள் இணைந்து நடிக்கும் ஒரு வாய்ப்பு அமையாமலேயே போயிருக்கும். சிலருக்கு அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தும், கடைசி நேரத்தில் நிறைவேறாமலும் போயிருக்கலாம்.

குறிப்பாக ரஜினி, ஜெயலலிதா நீண்டகாலமாக பீல்டில் இருந்தும் இருவரும் சேர்ந்து, ஒரு படத்தில் கூட நடிக்க முடியவில்லை. ஒரு படத்தில், இருவரும் இணைந்து நடிப்பதாக பேசப்பட்டு, கடைசியில் வேறு ஒரு படத்தில் நடிக்க ஜெயலலிதா கால்ஷீட் தந்ததால், அந்த படத்தில் இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்க முடியவில்லை. அதே போல், முத்து படத்தில் மீனா கேரக்டரில் சுகன்யா நடிப்பதாக இருந்த நிலையில், கடைசியில் அதில் மீனா நடித்தார்.

- Advertisement -

இப்படி பல படங்களில் இந்த கேரக்டரில் இவர் நடிக்கட்டும் என இயக்குநர்கள் ஆசைப்பட்டாலும், அந்த சூழலில் அந்த நடிகர் கால்ஷீட்டும், அந்த படத்தில் நடிப்பதற்கான சூழலும் இருந்தால் மட்டுமே, அவர்கள் நடிக்க முடியும். ரஜினி – கமல் இருவரும் தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்தும், இருவரும் சேர்ந்து நடிக்கும் ஒரு கதையை இன்னும் தமிழ் சினிமா இயக்குநர்கள் யாருமே முயற்சிக்கவில்லை என்பதும் கூட இதைப் போன்ற ஒன்றுதான்.

தமிழில் செம்பருத்தி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ரோஜா. பல படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், அர்ஜூன் என பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்த ரோஜா, தமிழில் கமலுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வீரா, உழைப்பாளி படங்களில் ரஜினியுடன் நடித்திருந்தார்.

- Advertisement -

சினிமாவில் கடைசியாக ரோஜா தமிழில் நடித்த படம் என்வழி தனிவழி. ஆர்கே ஹீரோவாக நடித்த இந்த படம், கடந்த 2015ம் ஆண்டில் வெளியானது. அதன் பின்னர் அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கவில்லை. அவர் கணவர் ஆர்கே செல்வமணி இயக்கும் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டவில்லை. ஆந்திராவில் தற்போது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில், ஆந்திராவின் சுற்றுலாத்துறை அமைச்சராக ரோஜா இருந்து வருகிறார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ரோஜா அளித்த நேர்காணல் ஒன்றில், மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்திருக்கிறது. அதுவும் தெலுங்கில் முன்னணி ஹீரோவாக உள்ள மகேஷ்பாபு படத்தில் நடிக்க வேண்டும். ஆனால், அவரது அம்மாவாக கண்டிப்பாக நடிக்க மாட்டேன். மகேஷ்பாபுவின் அக்கா அல்லது அண்ணி கேரக்டரில் நடிக்க அழைத்தால் கண்டிப்பாக அவருடன் நடிப்பேன் என்று கூறி இருக்கிறார் மாஜி கதாநாயகியும், தற்போதைய அமைச்சருமான ரோஜா.

- Advertisement -

சற்று முன்