தமிழ் சினிமா நடிகைகளில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். கேரளா வரவான இவர் தமிழில் பல முக்கிய படங்களில், வெற்றி படங்களில் நடித்தவர். அழகாக மட்டுமின்றி திறமையான நடிகையாகவும் கீர்த்தி சுரேஷ் பல படங்களில் நடித்து ரசிகர்களை அசத்தி வருகிறார். தமிழில், மலையாளத்தில், தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்க பல பட வாய்ப்புகள் தொடர்ந்து வருகின்றன.
தமிழில் ரஜினிகாந்துடன் அண்ணாத்தே, சிவகார்த்திகேயனுடன் ரெமோ, ரஜினி முருகன், விஜயுடன் சர்க்கார் மற்றும் பைரவா, விக்ரமுடன் சாமி 2, விஷாலுடன் சண்டக்கோழி 2, தனுஷூடன் தொடரி, ஜெயம் ரவியுடன் சைரன் 108 என பல படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்தவர். மறைந்த நடிகை சாவித்திரி தேவியின் வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம் என்ற படத்தில் சாவித்திரி கேரக்டரில் நடித்து கீர்த்தி சுரேஷ் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். இந்த படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகை தேசிய விருது கிடைத்தது.
கீர்த்தி சுரேஷ் சினிமாவில் ஒரு படத்துக்கு 2 கோடி முதல் 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். கடந்தாண்டில் இவரது ஆண்டு வருமானம் 125 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. படங்களில் நடித்த வகையில் இவர் 20 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருந்தாலும், இவர் அதிகமான விளம்பர படங்களில் நடிக்கிறார். இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் இவரது போஸ்ட்டுகள் வைரலாகின்றன. அதனால் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் அளவுக்கு ஒரு பெரிய செலிபிரட்டியாக மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக சம்பாதிக்கிறார்.
சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த ரகுதாத்தா படம் ரசிகர்களின் மனம் கவர்ந்த படமாக இருந்தது. ஆனால் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதற்கிடையே நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் அந்தணன் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அந்தணன் கூறுகையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் கீர்த்தி சுரேஷ், இந்த தகவலை அவரே கூறியிருந்தார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் அவரது தினசரி ஆட்டோ செலவுக்காக கீர்த்தி சுரேஷின் பெற்றோர் தினமும் 60 ரூபாய் பணம் தருவார்களாம். அந்த பணத்தை மிச்சம் பிடிக்க வேண்டும் என்பதற்காக கல்லூரிக்கு பஸ்சில் சென்றுவிட்டு, வீட்டுக்கு வரும்போது குறிப்பிட்ட தூரம் வரை பஸ்சில் வந்துவிட்டு, பிறகு ஆட்டோவில் வந்து வீட்டில் இறங்குவாராம்.
அப்படி ஆட்டோவில் செல்வதற்காக வீட்டில் தினமும் கொடுக்கப்பட்ட 60 ரூபாயில் மிச்சம் பிடித்து, அந்த பணத்தில் அவர் விரும்பியதை வாங்கி சாப்பிடுவாராம். விரும்பிய பொருளை வாங்கிக் கொள்வாராம். அப்படி பெற்றோரை ஏமாற்றி சிக்கனமாக இருந்திருக்கிறார். ஆனால் இப்போது அவரது ஆண்டு வருமானம் ரூ. 125 கோடியாக இருக்கிறது என்று அந்த வீடியோவில் அந்தணன் கூறியிருக்கிறார். இது நடிகை கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





