தமிழ் சினிமாவில் நடிகை சாய்பல்லவிக்கு ஒரு நல்ல முக்கியத்தும் கிடைத்திருக்கிறது. அமரன் படம் அவருக்கு நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்திருக்கிறது. அமரன் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை ரூ. 3 கோடியில் இருந்து ரூ. 8 கோடியாக அவர் உயர்த்தி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
மலையாளத்தில் பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் நடிகையாக அறிமுகமானவர் சாய்பல்லவி. முதல் படமே பெரிய அடையாளத்தை பெற்றுத் தந்தது. பிறகு என்ஜிகே மாரி 2 கார்கி அமரன் தண்டேல் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் இப்போது இந்தியில் இராமாயணம் என்ற படத்தில் சீதையாக நடித்து வருகிறார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த நடிகை சாய்பல்லவி மருத்துவம் படித்தவர். ஆனால் டாக்டராக விரும்பாமல் நடிகையாக சினிமாவுக்குள் வந்து விட்டார். அவரது துருதுரு பார்வையும் துள்ளலான பேச்சும் அசத்தலான நடனமும் இயல்பான நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.
அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த அமரன் படம் சாய்பல்லவிக்கு பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்து விட்டது. மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையான இந்த படத்தில் அவரது மனைவி இந்து ரெபேகா வர்கீஸ் கேரக்டரில் சாய்பல்லவி அப்படியே தத்ரூபமாக வாழ்ந்திருந்தார்.
இந்நிலையில் நடிகை சாய்பல்லவி அடுத்தடுத்த கேரக்டர்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இராமாயணம் என்ற இந்தி படத்தில் சீதை கேரக்டரில் நடிப்பதால் இதுவரை 3 படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை சாய்பல்லவி மறுத்திருக்கிறார். இது பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பது மட்டுமின்றி இதில் சீதையாக நடிப்பதை பெரிய பாக்கியமாக சாய்பல்லவி கருதுகிறார்.
நடிகர் மற்றும் நடிகைகளுக்கு அவர்களது உடல் ஆரோக்கியமும் அழகும்தான் பிரதானம். ஆரம்பத்தில் இருந்தே மேக்கப் போடாமல் இயல்பான முக அழகில் கேமரா முன் நின்று நடித்து வருவது சாய்பல்லவியின் சிறப்பம்சமாகும். மேலும் தினமும் 2 லிட்டர் இளநீர் காய்கறி பழங்களையே பெரும்பாலும் சாய்பல்லவி உணவாக எடுத்துக்கொள்கிறார். அதுதான் அவரது பிட்னஸ் எனர்ஜிக்கு அதிக காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தினமும் 2 லிட்டர் இளநீர் குடிப்பது என்பது சாதாரண குடும்ப பெண்களுக்கு சாத்தியமில்லை என்று ரசிகர்கள் புலம்புகின்றனர்.





