- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை சாய்பல்லவிக்கு இப்படி ஒரு பிரச்னை இருக்குதா? இது இயக்குனர்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்துமே… -...

நடிகை சாய்பல்லவிக்கு இப்படி ஒரு பிரச்னை இருக்குதா? இது இயக்குனர்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்துமே… – வருத்தப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக மலர் டீச்சர் என்ற கேரக்டரில் அந்த படத்தில் சாய்பல்லவி நடித்திருந்தார். முதல் படத்திலேயே தனது வசீகரமான அழகால், குறுகுறு பார்வையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதன்பிறகு தமிழில் மாரி 2 என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடிகை சாய்பல்லவி நடித்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றார். அடுத்து கார்கி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. கடந்தாண்டில் வெளியான அமரன் படம் அவருக்கு முன்னணி நடிகையாக அங்கீகாரம் பெற்றுத் தந்திருக்கிறது.

மலையாளம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடிகை சாய்பல்லவி இப்போது பிஸியாக நடித்து வருகிறார். இந்தியில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இராமாயணம் என்ற படத்தில் சீதை கேரக்டரில் சாய்பல்லவி நடிப்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் தெலுங்கிலும் பிஸியாக பல படங்களில் சாய்பல்லவி நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை சாய்பல்லவி கூறியதாவது, நான் தினமும் இரவில் 9 மணிக்கு தூங்கி அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுவேன். சார்ஜியாவில் மருத்துவப் படிப்பு படித்துக் கொண்டிருந்த போது அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து படிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. அந்த பழக்கம் அப்படியே நாளடைவில் பழகிவிட்டது.

அதிகாலை 4 மணிக்கு பிறகு நானே தூங்க முயற்சி செய்தாலும் என்னால் தூங்க முடியாது. தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து என்னுடைய அன்றாட பணிகளை தொடங்கி விடுவேன். ஆனால் அதேபோல் இரவு 9 மணிக்கு மேல் என்னால் கண் விழித்திருக்க முடியாது. கண்டிப்பாக இரவு 9 மணிக்கு எனக்கு தூக்கம் வந்துவிடும். ஆனால் நான் நடிக்கும் பல படங்களின் சூட்டிங் இரவு முழுவதும் நடக்கிறது. என்னால் இரவு 9 மணிக்கு மேல் தூங்காமல் இருக்க முடியாது.

இதை பார்த்த இயக்குனர்கள் சிலர் என்னை, சின்ன குழந்தை என்று கூட கிண்டலாக சொல்வார்கள். இரவு நேர சூட்டிங் என்றாலே எனக்கு பிரச்சனைதான். ஆனாலும் எப்படியாவது அடம்பிடித்து இரவு 9 மணிக்கு நான் தூங்கப் போய் விடுவேன் என்று நடிகை சாய் பல்லவி வெளிப்படையாக கூறியிருக்கிறார். இதனால் இரவு நேர படப்பிடிப்பில் சாய்பல்லவி இல்லாமல் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை எடுக்க முடியாமல் இயக்குனர்கள்தான் திண்டாட்டமடைகின்றனர்.

சற்று முன்