தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இந்தியிலும் சிட்டாடல் வெப் சீரிஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் சமந்தா நல்ல வரவேற்பை, கவனத்தை பெற்றிருக்கிறார். தமிழில் தெறி கத்தி தங்கமகன் நீதானே என் பொன்வசந்தம் சீமராஜா என பல படங்களில் நடிகை சமந்தா நடித்திருக்கிறார்.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த நடிகை சமந்தா, 4 ஆண்டுகளில் அவரை விட்டு பிரிந்து விவாகரத்து பெற்றார். அடுத்து மயோசிடிஸ் என்ற அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, பலவிதமான போராட்டங்களுக்கு பின் அந்த நோயில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்.
அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு புது புது பதிவுகளை செய்து வரும் நடிகை சமந்தா, அவ்வப்போது வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நடிகை சமந்தா, சுபம் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தனது வலைதள பக்கத்தில் நடிகை சமந்தா வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, ன் கையில் எப்போதும் வைத்திருக்கும் செல்போன் குறித்து எனக்கு திடீர் சிந்தனை எழுந்தது. இதையடுத்து 3 நாட்கள் என் செல்போனை சுவிட்ச் ஆப் செய்தேன். யாருடனும் பேசவில்லை. யாரையும் தொடர்பு கொள்ளவும் இல்லை. யாரையும் பார்க்கவும் இல்லை.
புத்தகம் படிப்பது, எழுதுவது என எந்த வேலையும் செய்யவில்லை. 3 நாட்கள் என் மூளைக்கு முழு ஓய்வு தந்தேன். இது ஒரு வித்யாசமான அனுபவமாக அமைந்தது. என்னுடைய ஈகோவின் பெரும்பகுதி என் செல்போனுடன் தான் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன். நான் யார், நான் எவ்வளவு முக்கியமானவள், நான் என்ன சாதித்தேன் என்பதை செல்போன் தான் சொல்கிறது.
அது இல்லாத போது நான் ஒரு சாதாரண உயிரினம் என்ற எண்ணமே வந்தது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் செல்போன்கள் நம்மை செயற்கையான விஷயங்களில் மூழ்கடித்து விடுகின்றன. நமது முன்னேற்றம் ஆரோக்கியத்திற்கும் செல்போன் எவ்வளவு தடையாக இருக்கிறது என்பதை முழுமையாக புரிந்து கொண்டேன் என்று நடிகை சமந்தா கூறியிருக்கிறார். இந்த கருத்தை பலரும் ஆதரித்து அவருக்கு பாராட்டுகளை கூறி வருகின்றனர்.





