தமிழ் சினிமாவில் கல்லூரி பையா தோழா வியாபாரி படிக்காதவன் சுறா என பல படங்களில் நடித்தவர் தமன்னா. ஜெயிலர் படத்தில் அவர் போட்ட காவலய்யா பாடல் குத்தாட்டம் இன்றும் இணையத்தில் டிரண்டிங்கில் இருந்து வருகிறது. தமிழை தொடர்ந்து தெலுங்கு இந்தி சினிமாவில் தமன்னா நடிக்க சென்றார்.
அங்கு இந்தி வெப் சீரிஸ் ஒன்றில் தமன்னா நடித்தார். அதில் உடன் நடித்த நடிகர் விஜய் வர்மா என்பவருடன் நெருக்கமாக தமன்னா இருந்தார். அந்த வெப் சீரிஸில் இருவரும் முத்தக் காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் நெருக்கமாக நடித்த நிலையில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது.
அதன்பிறகு அவர்கள் இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்தனர். ஓட்டல்களுக்கும் மற்றும் வெளியிடங்களுக்கும் விஜய் வர்மா தமன்னா இருவரும் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த இருந்தனர்.
ஆனால் அது நடக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமன்னா தனது காதலரை பிரிந்து விட்டார். அவரும் வேறு ஒரு நடிகையுடன் நெருக்கமாக பழகி வரும் வீடியோ காட்சிகள் புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை தமன்னா சில தினங்களுக்கு முன்பு புதிதாக நகைக்கடை ஒன்றை திறந்திருக்கிறார். இது அவரது சொந்த கடை என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நகை கடை திறப்பு விழாவில் நடிகை சமந்தா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். அப்போது நடிகை தமன்னாவும் பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் மிகவும் நெருக்கமாக காணப்பட்டனர். அந்த கடை திறப்பு விழாவுக்கு வந்த ஆர்யன் கான் நீண்ட நேரம் அங்கேயே இருந்துள்ளார். அவரும் தமன்னாவும் நீண்ட நேரம் மிகவும் நெருக்கமாக நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்த வீடியோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த பாண்டிங் இப்போது பாலிவுட் வட்டாரத்தில் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது. பழைய காதலர் விஜய் வர்மாவை பிரிந்த நிலையில் இப்போது நடிகை தமன்னாவுக்கு ஆரியன் கானுடன் காதல் ஏற்பட்டு விட்டதாக என்று சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கூறி வருகின்றனர். நடிகைகளை பொருத்த வரை இதுபோன்ற காதல் மன மாற்றங்கள் மிக சாதாரணமானதுதான் என்றும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.





