- Advertisement -
Homeபொழுதுபோக்குஉடல்நல பிரச்னைகளால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்த நடிகை சமந்தா - கடைசியாக இப்படி ஒரு முடிவை...

உடல்நல பிரச்னைகளால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்த நடிகை சமந்தா – கடைசியாக இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறாரே?

- Advertisement -

நடிகை சமந்தா, சினிமா ரசிகர்களுக்கு மிக பிடித்தமான ஒரு அழகான நடிகையாக இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் அதிகமாக நடித்துள்ளார். கத்தி, மெர்சல், தெறி ஆகிய படங்களில் விஜயுடன் நடித்தார். இந்த 3 படங்களுமே வெற்றிப்படங்காக அமைந்தது.

சூர்யாவுடன் அஞ்சான், தனுஷ் உடன் தங்க மகன், ஜீவாவுடன் நீதானே என் பொன் வசந்தம், சியான் விக்ரமுடன் 10 எண்றதுக்குள்ள, விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனுடன் சீமராஜா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்த வகையில், ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார்.

- Advertisement -

தெலுங்கு படங்களில் நடித்த போது நாகார்ஜூனா, அமலா தம்பதியின் மகன் நாக சைதன்யாவை, சமந்தா காதலித்தார். இருவரும் 2017ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் நான்கே ஆண்டுகளில் மனமுறிவு ஏற்பட்டு, 2021ல் பிரிந்து விட்டனர். இந்த பிரிவுக்கு முக்கிய காரணம், சமந்தாவை நடிக்க வேண்டாம் என்று நாக சைதன்யா கூறியதுதான் என்று சொல்லப்படுகிறது.

தொடர்ந்து சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வரும் சமந்தா நடித்த சாகுந்தம், யசோதை போன்ற படங்கள் போதிய வெற்றியை பெறவில்லை. இதற்கிடையே மயோசிடிஸ் என்ற தோல் அலர்ஜி நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமந்தா, கடந்த 2 ஆண்டுகளாகவே படங்களில் சரிவர நடிக்க முடியாமல், நோயுடன் போராடி வருகிறார். சிகிச்சையில் இருந்துக்கொண்டே, நடிக்கவும் செய்கிறார்.

- Advertisement -

இப்போது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் அண்ட் டிகே சிட்டாடல் வெப் சீரிஸ்சில் நடித்து வருகிறார்.புஜ்ஜி பாபு சனா இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக ராம்சரண் நடிக்கிறார். அடுத்த படங்களில் நடிக்கவும் அவர் ஆயத்தமாகி வருகிறார். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம்.

மயோசிடிஸ் நோய் பாதிப்பால் தனக்கு ஏற்பட்ட பிரச்னைகளையும், பெண்கள் உடல் நலனை நல்ல முறையில் பராமரிக்க வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த, சமந்தா டேக் 20 என்ற புதிய டாட்காஸ்ட் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். தனக்கு ஏற்பட்ட உடல் நலம் சார்ந்த பிரச்னைகள், உடலை ஆரோக்கியமாக பராமரிப்பது குறித்து பேச உள்ளார். வரும் 19ம் தேதியன்று தனது முதல் வீடியோவை வெளியிட இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்