தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழில் தெறி கத்தி சீமராஜா நீதானே என் பொன்வசந்தம் தங்கமகன் உள்ளிட்ட பல படங்களில் சமந்தா நடித்திருக்கிறார். மேலும் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா ஆடிய குத்தாட்டம் அவரை இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாட வைத்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் நாகர்ஜூனா மகன், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டில் நடிகை சமந்தா காதல் திருமணம் செய்து கொண்டார். பிறகு 2021ம் ஆண்டில் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். முறைப்படி விவகாரத்தும் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து சமீபத்தில் நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து 2வது திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் நடிகை சமந்தா இன்னும் முரட்டு சிங்கிளாக தான் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இடையே மயோசிடிஸ் என்ற தோல் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டார். அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த சமந்தா, இப்போது பழைய ஆரோக்கியத்துடன் காணப்படுகிறார். அடிக்கடி சில நடிகர்கள், இயக்குனர்களுடன் காதல் நெருக்கம் போன்ற பல்வேறு சர்ச்சைகளில் சமந்தா சிக்கிக் கொள்கிறார்.
இந்த சர்ச்சைகளை தாண்டி மீண்டும் இப்போது நடிக்க வந்திருக்கிறார் நடிகை சமந்தா. சமீபத்தில் ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கி தயாரிப்பாளராகவும் அவர் மாறி இருக்கிறார். அவரது சொந்த தயாரிப்பு நிறுவனம் ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் சார்பில் சுபம் என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதற்கிடையே நடிகை சமந்தா சிட்டாடல் என்ற இந்தி வெப் சீரிஸில் நடித்தார். அந்த வெப் சீரிஸ்க்கு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சூழலில் சிட்டாடல் சீரிஸ்சின் டைரக்டர் ராஜ் நெடிமூருடன் சமந்தா மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார். இருவரும் மிக தீவிரமாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக அவர்கள் சென்று வருவது வழக்கமாக மாறிவிட்டது. ராஜ் நெடிமூருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் சமந்தா தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விரைவில் இருவரும் திருமணம் செய்த போவதாகவும் மும்பையில் அதற்காக வீடு தேடிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே ராஜ் நெடிமூரின் முன்னாள் மனைவியும் எழுத்தாளருமான சியாமளி, தனது வலைதள பக்கத்தில் ஒரு பதிவை செய்திருக்கிறார். அந்த பதிவில், நம்பிக்கை என்பது விலை மதிப்பு இல்லாதது. ஒரு முறை அந்த நம்பிக்கை போய்விட்டால் எவ்வளவு கொடுத்தாலும் அதை வாங்க முடியாது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். தனது கணவர் மற்றும் சமந்தா குறித்தே அவர் இந்த கருத்தை பதிவிட்டுள்ளதாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.





