தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தில் சசிக்குமார் சிம்ரன் பிரதான கேரக்டர்களில் கணவன் மனைவியாக நடித்திருந்தனர். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தப்பி வரும் ஒரு அகதிகள் குடும்பம் பற்றிய கதைக்களத்தில் இந்த படம் இருந்தது. ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். அவரது இயக்கத்தில் வெளியான முதல் படம் டூரிஸ்ட் பேமிலி படத்துக்கு பிறகு அடுத்து படத்தை அபிஷன் ஜீவிந்த் இயக்குவார் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்தனர். ஆனால் அவர் படம் இயக்காமல் திடீரென திரைப்படத்தில் நடிகராகி விட்டார்.
வித் லவ் என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அவர் அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தில் அவர் நடித்து முடித்துள்ள நிலையில் வரும் பிப்ரவரி 6ம் தேதி வித் லவ் படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் நேர்காணல் பங்கேற்ற இயக்குனர் நடிகர் அபிஷன் ஜீவிந்த் தனது அடுத்த படங்கள் குறித்து சில முக்கிய தகவல்களை கூறியிருக்கிறார்.
உங்களது அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கப்போவது சூர்யா நானியா என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. ஏனெனில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அவர்களை அபிஷன் ஜீவிந்த் நேரில் சந்தித்து பேசியிருந்தார். அதனால் இதற்கு பதிலளித்த அபிஷன் ஜீவிந்த் கூறியதாவது, சூர்யா சார் நானி சார் இருவரையும் நான் சந்தித்தது எல்லாம் உண்மைதான். ஆனால் அவர்களுக்கான கதை என்னிடம் இல்லை.
அதே சமயம் என்னுடைய அடுத்த படம் பெரிய பட்ஜெட்டில் ஆக்சன் எமோஷனல் காமெடி படமாக உருவாகிறது. எனது மூன்றாவது படமாக ஒரு பிரமாண்டமான சயின்ஸ் பிக்சன் படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளேன் என்று அபிஷன் ஜீவிந்த் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இப்போது அபிஷன் ஜீவிந்த் நடித்துள்ள வித் லவ் படம் வருகிற 6ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்த படத்தின் பிரமோசனுக்காக இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்ஸ்ஸ் மூலமாக ஏழை எளிய மக்கள் ஆதரவற்றவர்கள் முதியோர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் செய்யப்படுகிறது. வித் லவ்வுடன் இந்த உதவியை செய்கிறோம் என்று வீடியோ வெளியிட்டு வித் லவ் படத்தை ரசிகர்களிடம் பிரமோசன் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.





