- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் நான் கோடிக்கணக்கில் பணத்தை இழந்து விட்டேன், மன்னிப்பு கேட்க விரும்பும் நடிகை சமந்தா...

அந்த விஷயத்தில் நான் கோடிக்கணக்கில் பணத்தை இழந்து விட்டேன், மன்னிப்பு கேட்க விரும்பும் நடிகை சமந்தா – குழப்பத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழில் தெறி கத்தி பாணா காத்தாடி அஞ்சான் தங்கமகன் சீமராஜா என பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா மகன் நாக சைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்தார். பிறகு 2021ம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

மயோசிடிஸ் என்ற அழற்சி நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, 2 ஆண்டுகளுக்கு மேலாக பலவிதமான மருத்துவ சிகிச்சைப் பெற்று குணமடைந்த நிலையில் இப்போது பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்தியில் சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் நடித்த சமந்தா, அடுத்து ரக்ட் பிரமாண்டம் என்ற வெப் சீரிஸில் நடிக்கிறார். பங்காராம் என்ற படத்தை சமந்தா தயாரிக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்க உள்ளது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை சமந்தா கூறியதாவது, நான் என்னுடைய 20 வயதில் சினிமாத் துறையில் நுழைந்தேன். அப்போது என்னுடைய எண்ணம் எல்லாம் எத்தனை பிராண்டுகள் நம்மை அணுகி நம் முகத்தை அவர்களின் பிராண்டுக்காக தேர்வு செய்கிறார்கள் என்பதில்தான் நம் வெற்றி அடங்கியிருக்கிறது என்று நான் நினைத்தேன்.

பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் பிராண்டுகள் அனைத்தும் என்னை தங்கள் பிராண்ட் தூதராக விரும்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் இப்போது நான் தவறான பொருள்களை தேர்வு செய்து தவறான உதாரணமாக முடியாது. அந்த சிறு வயதில் முட்டாள்தனமான செயல்பட்ட சமந்தாவிடம் இந்த சமந்தா மன்னிப்பு கேட்க வேண்டும்.

- Advertisement -

என் தேர்வுகள் குறித்து நான் சுய பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனக்கு தெரியாதது என தோன்றுவதைத்தான் பின்பற்ற வேண்டும். அதனால் இப்போது நான் ஒப்புக்கொள்ளும் ஒவ்வொரு பிராண்ட் குறித்தும் மருத்துவ ஆலோசனைகளை மேற்கொள்கிறேன். அதில் மருத்துவர்கள் கொடுக்கும் அறிவுரை அடிப்படையில் தான் ஒப்புக்கொள்கிறேன். என்னை பின்பற்றுவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

வெற்றி என்பது எப்படியும் நம்மை வந்து சேரும். அதற்காக தவறான முன் உதாரணமாக அமைந்துவிடக் கூடாது. கடந்த ஆண்டில் நான் கிட்டத்தட்ட 15 பிராண்டுகளை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதனால் கோடிக்கணக்கான பணத்தை இழந்து விட்டேன். அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஏனெனில் மற்றவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்கவே நான் விரும்புகிறேன் என்று நடிகை சமந்தா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்