நடிகை நயன்தாரா என்றாலே, இப்போதும் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு இருக்கிறது. திருமணத்துக்கு பிறகும் அவரது படங்களை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால்தான் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டமே கிடைத்தது. ஹீரோயின் ஓரியண்டேடு சப்ஜெக்ட் என, நயன்தாராவுக்காக நிறைய கதைகள் உருவாக்கி, எடுக்கப்பட்டன.
ஆரம்ப காலத்தில் ஐயா படத்தில் நடிக்க வந்த நயன்தாரா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். அதனால் வாய்ப்பு கிடைத்த படங்களில் எல்லாம் நடித்தார். இதில் சில படங்களில் அதீத கவர்ச்சி காட்டினார். உதாரணமாக வல்லவன், சத்யம் போன்ற படங்களில் சிம்பு மற்றும் விஷாலுடன் பாடல் காட்சிகளில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டினார்.
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவுடன் காதல், பிறகு பிரபுதேவாவுடன் காதல் என இருந்த நயன்தாரா, இருவருடனும் பிரேக்கப் ஆன நிலையில்தான் டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்தார். சிம்புவுடன் நயன்தாரா பிரேக்கப் ஆக காரணம், அவர்களுக்குள் ஏற்பட்ட ஈகோ பிரச்னை தான். பிரபுதேவா, நயன்தாராவை திருமணம் செய்ய மறுத்து, லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் தொடர விரும்பியதால், நயன்தாரா அவரை விட்டு விலகினார்.
மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் என எதிர்பார்த்த நயன்தாராவின் 75வது படம் அன்னபூரணி, சரியாக போகவில்லை. ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி தேவையற்ற சர்ச்சை வசனங்களால் நயன்தாரா அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நிலமை சென்றுவிட்டது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்தும் படம் நீக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த 2016ம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவம், இப்போது வைரலாகி வருகிறது. அதாவது தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜூனாவை மேடையில் வைத்து, நடிகை நயன்தாரா அவமானப்படுத்தியதால்தான் தெலுங்கில் அவர் அதிக படங்களில் நடிக்கவில்லை. அவருக்கு பட வாய்ப்பு வரவில்லை என்ற விமர்சனமும் இப்போது எழுந்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டில் சைமா விருது வழங்கும் விழா நடந்தது. அதில் சிறந்த நடிகைக்கான விருது பெற நடிகை நயன்தாராவை மேடைக்கு அழைக்கப்பட்டார். அப்போது அந்த விருதை வழங்க, நடிகர் அல்லு அர்ஜூனா மேடைக்கு அழைக்கப்பட்டார். அவர் மேடையில் வந்து நயன்தாராவுக்கு விருது வழங்க நின்றிருந்தார். அப்போது மேடையில் பேசிய நயன்தாரா, இந்த விருதை தனது காதலன் விக்னேஷ் சிவன் கையால் வாங்க வேண்டும் என்று கூறியதை அடுத்து, விக்னேஷ் சிவன் மேடையேறி அந்த விருதை நயன்தாராவுக்கு வழங்கினார். இப்படி தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனாவை மேடையில் அவமானப்படுத்தியதால்தான், நயன்தாரா தெலுங்கில் பட வாய்ப்புகளை பெற முடியவில்லை என்ற ஒரு தகவல் இப்போது வைரலாகி வருகிறது.




