- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகேஷுடன் ரஜினி இணையும் படத்திற்கு டைட்டில் ஈகிள் இல்லையாம்... வெளியானது புதிய தகவல்... இந்தப் பெயர்...

லோகேஷுடன் ரஜினி இணையும் படத்திற்கு டைட்டில் ஈகிள் இல்லையாம்… வெளியானது புதிய தகவல்… இந்தப் பெயர் சூப்பரா இருக்கே…

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த், தனது 171 வது திரைப்படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இருக்கிறார். இந்த திரைப்படத்திற்காக கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக திரைக்கதை எழுதி வருகிறார் இயக்குனர். வேறு எந்த திரைப்படங்களுக்கும் அவர் இந்த அளவு மெனக்கெட்டது இல்லை என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

 

- Advertisement -

மொத்தமாக தனது முந்தைய திரைப்படங்களில் இருந்து வேறுபட்டதை காட்ட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் லோகேஷ் இந்த கதையை எழுதியுள்ளாராம். மேலும் இது சோதனை முயற்சியாக தான் அவர் கையில் எடுத்திருப்பதாக லோகேஷின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

 

- Advertisement -

இந்த திரைப்படத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருக்காது என்றும் இயக்குனர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதேபோல் எல் சி யூ வில் ரஜினிகாந்த் உடனான படம் வராது என்றும் லோகேஷ் கனகராஜ் தெளிவுபடுத்தி இருந்தார். தற்போது சூட்டிங் ஆரம்பிக்கும் பணிகளில் லோகேஷ் கவனம் செலுத்தி வருகிறார்.

 

இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். சண்டை பயிற்சியாளர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணிபுரிய இருக்கின்றனர். இதன் முதல் போஸ்டரை ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் அமைந்தது. முழுக்க முழுக்க இரண்டு கைகளையும் வாட்ச்சுகளை கட்டிக்கொண்டு கூலிங் கிளாஸ் உடன் போஸ் கொடுத்தார் ரஜினிகாந்த்.

 

அப்போதே இது ஏதோ களத்தில் மையப்படுத்திய திரைப்படம் என்று பலரும் கூறி வந்தனர். இதே போல் தங்க கடத்தலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதேசமயம் படத்தில் நாகார்ஜூன், ஷோபனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் இடம்பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

 

இதற்கு, ஈகிள் என லோகேஷ் கனகராஜ் பெயர் வைத்திருப்பதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் அது டைட்டில் இல்லை என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகிறது. விக்ரம் லியோ திரைப்படத்தை போல வீடியோ வெளியிட்டு படத்திற்கான அறிவிப்பு ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த நிலையில் படத்திற்கு தங்கம் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷயம் இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், தங்கம் பெயர் நன்றாகத்தான் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்