- Advertisement -
Homeபொழுதுபோக்குடிகிரி குளிர்.. 6 நிமிட ஐஸ்பாத்.. சமந்தாவின் ட்ரெண்டிங் வீடியோ

டிகிரி குளிர்.. 6 நிமிட ஐஸ்பாத்.. சமந்தாவின் ட்ரெண்டிங் வீடியோ

- Advertisement -

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. அவர் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்ட அவர் தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்தார்.

அவர்களது திருமணம் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் பிரமாண்டமாக நடந்தது. திருமணத்திற்கு பிறகும் தனது நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் திடீரென நாக சைதன்யாவும், சமந்தாவும் விவகாரத்து பெற்று சில வருடங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் அவர் நடித்ததுதான் இந்த விவாகரத்துக்கு காரணமாக இருக்கும் என பல யூகங்கள் அந்த விவகாரத்தில் கிளப்பப்பட்டன.

- Advertisement -

திருமண முறிவுக்கு பிறகு சமந்தாவின் கரியர் க்ளோஸ் ஆகிவிடும் என பலர் கூறிய சூழலில் அதற்கு பிறகுதான் அவருக்கான கிராஃப் உச்சம் சென்றது. குறிப்பாக புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம் ஆடிய பிறகு அவருக்கென்று ரசிகர் கூட்டம் பெருகியது. கையோடு ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்க கமிட்டானார். இப்படிப்பட்ட சமயத்தில் அவருகு மையோசிடிஸ் எனும் தோல் நோய் வந்தது.

தீவிர சிகிச்சைக்கு பிறகு அந்த நோயிலிருந்து மீண்ட அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் ரொம்பவே எதிர்பார்த்து நடித்த படம் சாகுந்தலம். சில மாதங்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும் படத்துக்கு போட்ட பட்ஜெட்டில் ஒரு சதவீதத்தை கூட திரும்ப எடுக்க முடியவில்லை என்றும் டோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. எனவே சமந்தாவின் கரியரில் மோசமான தோல்வி படம் என்ற பெயரை சாகுந்தலம் பெற்றிருக்கிறது.

- Advertisement -

இதற்கிடையே விஜய் தேவர்கொண்டாவுடன் குஷி படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படமாவது கைக்கொடுக்க வேண்டும் என்ற வேண்டுதலில் இருக்கின்றனர் சமந்தாவின் ரசிகர்கள். நிலைமை இப்படி இருக்க சில காலம் திரைப்படங்களில் நடிக்கமாட்டேன் என கூறி வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்துவிட்டார்.

இதனை கேட்டு ரசிகர்கள் ஒருபக்கம் அதிர்ச்சியடைந்தாலும் அவரது உடல்நலத்தை கவனிக்கத்தான் இந்த முடிவை எடுத்திருப்பார் என கூறி தங்களை தாங்களே தேற்றிக்கொண்டனர். சினிமாவிலிருந்து விலகியிருக்கும் சமந்தா தற்போது வெளிநாட்டு டூரில் இருக்கிறார். அதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகிவருகின்றன.

இந்நிலையில் இந்தோனேசியா சென்றிறுக்கும் சமந்தா நான்கு டிகிரி குளிரில் சுமார் ஆறு நிமிடங்கள் ஐஸ்பாத் எடுத்திருக்கிறார். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவிவருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பார்க்கும்போதே உடல் உறைகிறதே எப்படி நீங்கள் இதனை செய்தீர்கள் என ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்