- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த டைரக்டர் என்னை அட்ஜஸ்ட்மெண்டுக்கு கூப்பிட்டார், பேரோட நான் சொல்ற மாதிரி விசித்ரா ஏன் சொல்ல...

அந்த டைரக்டர் என்னை அட்ஜஸ்ட்மெண்டுக்கு கூப்பிட்டார், பேரோட நான் சொல்ற மாதிரி விசித்ரா ஏன் சொல்ல மாட்டேங்கறாங்க – போட்டு தாக்கிய நடிகை ஷகிலா

- Advertisement -

திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது, பிக்பாஸ் வீட்டுக்குள் நடிகை விசித்ரா சொன்ன நைட் ரூமுக்கு வந்துடு என்று சொன்ன ஹீரோ என 2 விஷயங்கள்தான், கடந்த வாரத்தில் அனலாக பற்றி எரிந்த விவகாரங்களாக இருந்தன. இந்த விவகாரத்தில், நடிகை ஷகிலாவும் ஒரு பகீர் தகவலை சொல்லி, எரிகிற தீயில் நெய் ஊற்றியிருக்கிறார்.

சமீபத்தில் நடிகை ஷகிலா ஒரு நேர்காணலில் கூறியதாவது, நடிகை விசித்ரா என்னுடைய பிரண்டுதான். சில படங்களில் நானும் அவரும் ஒன்றாக நடித்திருக்கிறோம். அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் சொன்ன அந்த விஷயத்தில், தன்னை பெட்ரூமுக்கு வரச் சொன்ன நடிகர் யார் என அவர் வெளிப்படையாக சொல்லி இருக்க வேண்டும்.

- Advertisement -

அதே போல், இந்த சம்பவத்தால் சினிமாவே வேண்டாம் என விலகி இருந்தவர் இப்போது எதற்கு மீடியா வெளிச்சத்துக்குள் வருகிறார். குக் வித் கோமாளியில் கலந்துகொண்டது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இரண்டுமே அவருக்கான பப்ளிசிட்டியை தேடிக் கொண்டு மீண்டும் சினிமா வாய்ப்பு பெற விரும்புகிறாரோ என தெரியவில்லை.

தன்னை பெட்ரூமுக்கு வரச் சொன்ன நடிகர் பெயரை வெளிப்படையாகச் சொன்னால், பிறகு தெலுங்கு சினிமாவில் நடிக்க போனால், அப்போது உதைப்பார்களோ என விசித்ரா பயப்படுகிறாரா, விசித்ராவை பொருத்தவரை மிகவும் அவரை தைரியமாக ஒருவராக தான் நான் பார்க்கிறேன்.

- Advertisement -

நான் தெலுங்கு சினிமா இன்டஸ்ட்ரியில் பல படங்களில் இப்போதும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். தெலுங்கு பட டைரக்டர் ஈவி சத்தியநாராயண ராவ் என்பவர் என்னை அட்ஜஸ்ட்மெண்டுக்கு கூப்பிட்டார். தப்பாக தான் கூப்பிட்டார். அடுத்த படத்தில் சான்ஸ் தருகிறேன் என்று அழைத்தார்.

சார், இந்த படத்தில் நடித்ததற்கு சம்பளம் வாங்கி விட்டேன். அடுத்த படத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை, அதற்கு அவசியமும் இல்லை என்று மறுத்துவிட்டேன். அந்த ஈவி சத்தியநாராயணராவ் தெலுங்கு ஹீரோ நடிகர் அல்லலி நரேஷ் என்பவரின் தந்தை. இப்போது அவர் இல்லை. இறந்து விட்டார். இதுகுறித்து தெலுங்கு மொத்த இன்டஸ்ட்ரி வந்து கேட்டாலும் ஆமாம், அவர் என்னை கூப்பிட்டார் என தைரியமாக சொல்வேன் என்று கூறியிருக்கிறார் ஷகிலா.

- Advertisement -

சற்று முன்