தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள கமல்ஹாசன், மிக விரைவில் ராஜ்யசபா எம்பி ஆகவும் போகிறார். ஆரம்பத்தில் திமுகவை எதிர்த்து அரசியல் செய்த கமல்ஹாசன், இப்போது திமுகவின் தீவிர விசுவாசியாக மாறியதால் இந்த ராஜ்யசபா எம்பி பதவி அவருக்கு கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் கமல்ஹாசன் – சரிகா தம்பதிக்கு பிறந்த மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன். இருவருக்குமே இன்னும் திருமணம் ஆகவில்லை. ஸ்ருதிஹாசன் 39 வயதான நிலையில் இன்னும் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். தமிழில் ஏழாம் அறிவு படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து புலி பூஜை வேதாளம் 3 சிங்கம் 3 லாபம் உள்ளிட்ட சில படங்களில் ஸ்ருதிஹாசன் நடித்தார். தமிழில் சரியான வரவேற்பு அவருக்கு இல்லாததால் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் தாராளமான கவர்ச்சி காட்டி நடித்தார். இப்போது தமிழில் கூலி படத்தில் நடித்திருக்கும் ஸ்ருதிஹாசன் இனி தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை தனது ஆண் காதலர்கள் சிலருடன் லிவிங் டூ ரிலேசன்ஷிப் முறையில் மும்பையில் தனியாக குடும்பம் நடத்திய நடிகை ஸ்ருதிஹாசன், திருமணத்தில் விருப்பமே இல்லை என்றுதான் கூறி வருகிறார். தனக்கு பிடித்தமான முழுமையான ஆண் ஒருவரை சந்திக்கும் போது எனக்கு திருமணம் நடக்கவும் வாய்ப்புள்ளது என்றும் அவர் சமீபத்தில் கூறியிருக்கிறார்.
மேலும் தனது திருமணம் குறித்து பேசிய நடிகை ஸ்ருதிஹாசன், என்னுடைய காதல் தோல்விகளால் திருமணம் நடக்காமல் போய்விட்டது. ஆனால் நான் எப்போதுமே அம்மாவாக இருக்க ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் சிங்கிள் பேரண்ட் ஆக இருக்க நான் விரும்பவில்லை. ஒரு குழந்தைக்கு இரண்டு பேரண்ட் கண்டிப்பாக முக்கியம்.
ஒரு குழந்தைக்கு இரண்டு பேரண்ட் இருந்தால்தான் அது சிறந்ததாக இருக்கும். அதற்கான நான் சிங்கிள் பேரண்ட் ஆக இருப்பவர்களை அவமானப்படுத்தவில்லை. அதற்கான நான் தத்தெடுக்கலாம் என்று கூட நினைக்கிறேன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார். திருமணத்தில் விருப்பமில்லை, அம்மாவாக ரொம்பவும் ஆசை என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியிருப்பது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





