- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த 4 ஹீரோக்களும் கூட அரசியலில் தகுதியானவர்கள்தான், இன்றைய முதல்வருக்கு என்ன தகுதி இருக்கிறது? -...

அந்த 4 ஹீரோக்களும் கூட அரசியலில் தகுதியானவர்கள்தான், இன்றைய முதல்வருக்கு என்ன தகுதி இருக்கிறது? – இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கேள்வி!

- Advertisement -

நடிகர் விஜய் குறித்தும் தமிழக வெற்றிக் கழகம் குறித்தும் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருபவர் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இந்நிலையில் தமிழக முதல்வராக விஜய் ஆன பிறகு தனது முதல் பதிவை தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் ஜேம்ஸ் வசந்தன் கூறியிருப்பதாவது, தமிழக சட்டசபையில் முதல்வராக அமரும் போட்டியில் யார் முதல்வர் பதவிக்கான தகுதியானவர் கோணத்தில் இதை பார்க்க வேண்டும். போட்டியில் இருப்பவரில் யார் அங்கு அமரலாம். அமர வைக்கப்பட வேண்டும் என்பது படித்த அறிவுள்ள சிந்திக்கும் திறன் உள்ள பொறுப்புள்ள எல்லோருக்கும் ஓரளவுக்கேனும் தெரியும்.

- Advertisement -

படிப்போ அரசியல் அனுபவமோ தொலைநோக்கு பார்வையோ சேவை சிந்தனையும் உழைக்க தயங்காத மனஉறுதியும் தியாக உணர்வு மக்கள் நலனில் அக்கறை கடை நிலை மக்களின் முன்னேற்ற எண்ணமோ ஒடுக்கப்பட்டவரின் உயர்வு குறித்த கவலையோ இம்மாநிலத்தை பெருமைப்படுத்தும் நோக்கமோ என பலவித தகுதிகளில் ஒரு சிலவேனும் இருப்பவரை தானே போட்டியாளராக கருத முடியும்?

ஒருவேளை சிவகார்த்திகேயனையோ விஜய் சேதுபதியையோ கமல்ஹாசனையோ ரஜினிகாந்தையோ தேர்ந்தெடுத்தால் கூட அதில் சில நியாயங்கள் உண்டு. சிவகார்த்திகேயன் ஒரு எம்பிஏ பட்டதாரி. நிர்வாகத்தில் ஏட்டுக்கல்வியும் ப்ராஜெக்ட் செய்த சமயத்தில் ஒரு சில நிறுவனங்களில் பணிபுரிந்ததும் தந்தையை இழந்து வாழ்க்கைச் சவால்களை ஒரு கட்டத்தில் உணர்ந்ததும் வேலைக்கு அங்கங்கே முயன்ற உயர்ந்த அனுபவம் கொண்டவர்.

- Advertisement -

விஜய் சேதுபதி அரசு பள்ளியில் படித்து எல்லாவித அடிமட்ட வேலைகளையும் செய்து வருமான போதாமல் வளைகுடா நாட்டுக்குச் சென்று வாழ்க்கை போராட்டத்தின் கடுமையான உண்மைகளை உணர்ந்து போராடி வாய்ப்பு தேடி தேடி அலைந்து உயர்ந்த அனுபவம் நடிகர் விஜய் சேதுபதிக்கு உள்ளது. நடிகர் கமல்ஹாசன் தீவிர வாசிப்பாளர். தீராத அறிவுப்பசி கொண்டவர். நல்ல சிந்தனையாளர். எழுத்தாளர். உலக வரலாறுகளை படித்தவர். அவருக்கென ஒரு பாதை உண்டு.

நடிகர் ரஜினிகாந்த் ஒரு பஸ் கண்டக்டராக இருந்து போராடி திரைப்படத்துக்குள் வந்த பிறகும் பல தனிப்பட்ட வாழ்க்கை சவால்களை சந்தித்து இந்த இடத்திற்கு உயர்ந்தவர். ஆன்மீக அனுபவம் ஒரு பலம். இவர்கள் எல்லோருமே நிஜ வாழ்க்கையின் பல கூறுகளை சந்தித்து எதிர்கொண்டு வெற்றி கண்டவர்கள். ஆனாலும் இவர்களை உடனே முதல்வராக ஆக்கிவிட முடியாது. ஒரு சட்டமன்ற உறுப்பினராகி அமைச்சராக கூட செயல்பட முடியும். ஆனால் கட்அவுட் வைத்தவர்கள், பாலாபிஷேகம் செய்தவர்கள் எல்லாம் எம்எல்ஏக்களாக அமைச்சர்களாக இருப்பது தமிழ்நாட்டுக்கே அவமானம் என்று ஜேம்ஸ் வசந்தன் தனது பதிவில் ஆவேசமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்