நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்த படத்தின் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகளை இயக்குனர் நெல்சன் விறுவிறுப்பாக செய்து வருகிறார். வருகிற செப்டம்பர் 3ம் தேதி படம் ரிலீஸ் என்று முதலில் சொல்லப்பட்ட நிலையில் இப்போது தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது 173வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது. இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி என்று முதலில் கூறப்பபட்டது.
ஆனால் இப்போது தலைவர் 173 படத்தின் இயக்குனர் ஓமை கடவுளே டிராகன் படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்தான் தலைவர் 173 படத்தை இயக்குகிறார் என்பதை கடந்த வாரத்தில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் உறுதி செய்து விட்டது.
இந்நிலையில் இயக்குனர் மற்றும் நடிகர் மிஷ்கினை சந்தித்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து பேசியிருக்கிறார். தலைவர் 173 படத்தில் முக்கிய கேரக்டர் இருப்பதாகவும் அதில் ரஜினியுடன் நீங்கள் இணைந்து நடிக்க வேண்டும் என்றும் அஸ்வத் மாரிமுத்து மிஷ்கினிடம் கூறியிருக்கிறார்.
கனடாவில் உள்ள தனது மகளை பார்க்க செல்லும் பிஸியில் இருந்த இயக்குனர் மிஷ்கின், கனடாவில் இருந்து திரும்பி வந்த பிறகு தலைவர் 173 படத்தில் நடிப்பது குறித்து பேசுகிறேன் என்று அஸ்வத் மாரிமுத்துவிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் இந்த படத்தில் மிஷ்கின் இருக்க வேண்டும் என்பதில் அஸ்வத் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்.
ஏனென்றால் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் படத்தில் மிஷ்கின் கல்லூரி முதல்வராக முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். படமும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. சூப்பரான அவரது கேரக்டரும் பெரிய அளவில் பாராட்டை பெற்றது. அந்த சென்டிமென்ட் காரணமாக தலைவர் 173 படத்திலும் மிஷ்கின் இருக்க வேண்டும் என்பது அஸ்வத் மாரிமுத்துவின் ஆசையாக உள்ளது.





