தமிழ் சினிமாவில் நடிகை சிம்ரன் முன்னணி நடிகைகளின் ஒருவராக இருந்தவர். கடந்த 1990களில் பல வெற்றி படங்களில் நடித்தவர். விஜய், அஜித், சரத்குமார், அர்ஜூன், விக்ரம், முரளி, பிரபுதேவா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் சிம்ரன்.
தமிழில் பல படங்களில் சிறந்த நடிகையாக தனது அழுத்தமான நடிப்பை, சிறந்த நடனத்தை வெளிப்படுத்தி இருந்தார் சிம்ரன். அவர் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், வாலி, பிரியமானவளே, ஏழுமலை, ரமணா, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.
நடிகர் விஜயுடன் யூத் படத்தில் ஆல்தோட்ட பூபதி நானடா என்ற பாடலுக்கு ஐட்டம் சாங்குக்கு ஆடி அசத்தியவர் சிம்ரன். அதே போல் பிதாமகன் படத்தில் சூர்யா, விக்ரமுடன் ஒரு பாட்டுக்கு நடனமாடி அசத்தி இருப்பார் நடிகை சிம்ரன். வசந்த் இயக்கத்தில் சூர்யாவுடன் முதன்முறையாக நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிம்ரன்.
இப்போதும் பேட்ட, சீமராஜா, அந்தகன் உள்ளிட்ட படங்களில் சிம்ரன் நடித்திருக்கிறார். தொடர்ந்து அவர் படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் அவர் நடிகர் விஜயை சந்தித்து, ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதாவது நடிகர் விஜய் நடிக்கும் ஒரு படத்தை அவர் தயாரிக்க விரும்புவதாகவும் அதற்காக கால்ஷீட் தர வேண்டும் என்றும் விஜய்யிடம் அவர் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் பேசிய விஜய் பல விஷயங்களை அவருக்கு பக்குவமாக தெளிவுபடுத்தி உள்ளார்.
சிம்ரனிடம் பேசிய விஜய், நான் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க திட்டமிட்டுள்ளேன். அதற்காக இயக்குனர், தயாரிப்பாளர் எல்லாம் ஏற்கனவே முடிவாகிவிட்டது. அதனால் அதில் எந்த மாற்றமும் இப்போது செய்ய முடியாது. அது மட்டுமின்றி என்னுடைய படங்கள் ரிலீஸ் ஆகும் நேரங்களில் எப்போதுமே பயங்கரமான பிரச்சனைகள் ஏற்படும்.
பல விதங்களில் பிரச்னை வரும். எப்படி பிரச்சனை வரும் என்றே தெரியாத அளவுக்கு பிரச்சனைகள் புதிதாக உருவாகும். அது போன்ற பெரிய பிரச்சனைகள் எல்லாம் சமாளிக்க உங்களால் முடியாது. அதனால் அதெல்லாம் வேண்டாம், நீங்கள் ஜாலியாக இருங்கள் என்று கூறி மறுத்திருக்கிறார். சிம்ரன் எந்த தைரியத்தில் விஜயை வைத்து படம் தயாரிக்க ஆசைப்பட்டார் என்றே தெரியவில்லையே என்று கோலிவுட் வட்டாரம் பயங்கரமான ஆச்சரியத்தில் இருந்து வருகிறது.





