கோலிவுட் திரையுலகில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்தவர் நடிகை சிம்ரன். நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், அங்கிருந்து தனது பயணத்தை சக்சஸ் புல்லாக தொடங்கினார். மூத்த நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்தார். இதில் மிக முக்கியமாக துள்ளாத மனமும் துள்ளும் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது.
இங்கிருந்து பயணித்த அவர், நம்பர் ஒன் நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். சிம்ரனின் திரையுலக பயணத்தில் ஏராளமான திரைப்படங்கள் முக்கியமான இடத்தை பிடித்தன. வாலி, ஜோடி என அவரது வெற்றி திரைப்படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படமும் அவரது பயணத்தில் மிக முக்கியமான காவியமாக அமைந்தது. இதன் பிறகு திருமண வாழ்க்கையில் கமிட் ஆன அவர், திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை மட்டும் அவர் பயன்படுத்தி வருகிறார். சீமராஜா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக வந்தார்.
இப்படியான சூழலில் தற்போது அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் சிம்ரன். அஜித்துடன் அவர் வரும் காட்சிகள் திரையரங்குகளை திருவிழா கோலமாக்கின. அதில் வாலி திரைப்படத்தின் பின்னணி பாடலும் இடம்பெற்று இருந்ததால் ரசிகர்கள் விசில் பறக்க விட்டனர். மேலும் அதில் இடம்பெற்ற சுல்தானா பாடலும் வைரலானது.
எதிரும் புதிரும் படத்தில் சிம்ரன் நடனமாடிய அந்த பாடல் ட்ரெண்டாகி வருகிறது. இப்படியான சூழலில் அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சிம்ரன் பேசிய கருத்து தற்போது வைரலாகி வருகிறது. அதில் கூறிய அவர், சமீபத்தில் ஒரு துணை நடிகை என்னை போல் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படத்தில் நடித்திருந்தார். அதனைப் பார்த்து அவருக்கு மெசேஜ் செய்திருந்தேன்.
உங்களை இந்த கதாபாத்திரத்தில் பார்ப்பதில் ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறினேன். உடனடியாக அவர் ஆண்ட்டி கதாபாத்திரத்திற்கு இது எவ்வளவோ நல்லது என்று கூறினார். அப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு உணர்ச்சிப்பூர்வமற்ற பதில் அது. டப்பா ரோல்களை விட ஆன்ட்டி ரோல் நல்லதுதான். கன்னத்தில் முத்தமிட்டால் எனக்கு அப்படி ஒரு திரைப்படம்தான் என்று கூறினார். சிம்ரனின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அவர் எந்த நடிகையை குறிப்பிட்டு பேசினார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.





