கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் சின்ன மாப்ளை தலைவாசல் ராசா மகன் பொன்விலங்கு வண்டிசோலை சின்ராசு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சிவரஞ்சனி. சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் அப்போது அழைக்கப்பட்டவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பல அவர் படங்களில் நடித்தார். அப்போது தெலுங்கு நடிகர் மேகா ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில் சினிமாவை விட்டு விலகினார். இப்போது அந்த நட்சத்திர தம்பதியின் மகன் ரோஷன் மேகா சினிமாவில் அறிமுகமாகிறார். தெலுங்கில் சாகச படமாக உருவாக உள்ள ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் ரோஷன் மேகா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை மேகா ஸ்ரீகாந்த் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். இந்த படத்தில் ரேகா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார். நடிகர் வினய் ராய் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்திரா காந்தி மோகனகிருஷ்ணா படத்தை டைரக்ட் செய்கிறார்.





