நடிகை சிநேகா, தமிழ் சினிமாவில் கேஆர் விஜயாவுக்கு பிறகு புன்னகை அரசி என வர்ணிக்கப்பட்டவர். தனது வசீகரமான சிரிப்பால், ரசிர்களின் மனம் கவர்ந்தவர். சசி கணேசன் இயக்கத்தில் விரும்புகிறேன் படத்தில், பிரசாந்துக்கு ஜோடியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தன் பக்கம் ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.
தொடர்ந்து விஜய், அஜீத், தனுஷ், விக்ரம், ஸ்ரீகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். புதுப்பேட்டை படத்தில், விலைமாது கேரக்டரில் சிநேகா நடித்தது குறிப்பிடத்தக்கது. வசீகரா, ஏப்ரல் மாதத்தில், ஜி, கிங், ஆனந்தம், ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே போன்ற படங்களில் சிநேகா நடிப்பு அதிக வரவேற்பை பெற்றது.
நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துக்கொண்ட, 2 பிள்ளைகளுக்கு தாயான நிலையில், அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். உன் சமையலறையில், வேலைக்காரன் படங்களில் சிநேகா நடிப்பு சிலாகித்து பேசப்பட்டது. டிவி சானல்களில் நடன போட்டி நிகழ்ச்சிகளில் 3 பேரில் ஒரு நடுவராக சிநேகா பங்கேற்கவும் செய்கிறார்.
சிநேகா பிஸியாக நடித்துக்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், வசூல்ராஜா எம்பிபிஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்புதல் கேட்கப்பட்டது. அந்த படத்தின் ஹீரோ கமல்ஹாசன் என்றதால், அந்த படத்தில் நடிக்க சிநேகா தயங்கி இருக்கிறார். முதலில் நடிக்க விருப்பமில்லை என்றுதான் கூறியிருக்கிறார்.
காரணம் கேட்ட போது, கமல்ஹாசன் படத்தில் உதட்டு முத்தக்காட்சி இருக்கும். அதுபோன்ற காட்சிகளில் நான் நிச்சயமாக நடிக்க மாட்டேன். அந்த கண்டிசனுக்கு ஒத்துக்கொள்வதாக இருந்தால், வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடிக்க சம்மதிக்கிறேன் என்று டைரக்டர் சரணிடம் கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் உலகநாயகன் என அழைக்கப்படும் கமல்ஹாசன் படத்தில் நடிக்க சிநேகா தயங்கியதே, அவரது படத்தில் முத்தக்காட்சி இருக்கும் என்பதால்தான். அப்படி ஒரு பாதுகாப்பற்ற தன்மையை, பயத்தை நடிகைகளுக்கு ஏற்படுத்தியவர் என்ற கோணத்தில் இந்த தகவலை பத்திரிகையாளர் பிஸ்மி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.





