- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் பிறந்த தமிழ் மண்ணுக்கு வணக்கம்... சென்னை மேடையில் உணர்ச்சி வசப்பட்ட அல்லு அர்ஜுன்... கலகலப்பாக...

நான் பிறந்த தமிழ் மண்ணுக்கு வணக்கம்… சென்னை மேடையில் உணர்ச்சி வசப்பட்ட அல்லு அர்ஜுன்… கலகலப்பாக நடைபெற்ற புஷ்பா 2 நிகழ்ச்சி…

- Advertisement -

தமிழ் சினிமாவைப் போலவே தெலுங்கு சினிமாவிலும் ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். சொல்லப்போனால் தெலுங்கு சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே கூறலாம். அதில் மிக முக்கியமானவர் அல்லு அர்ஜுன்.

 

- Advertisement -

தனது கடின உழைப்பினாலும், சரியான படங்களை தேர்வு செய்ததாலும் வெற்றிகளை குவித்து வரும் அல்லு அர்ஜுன், அங்கு முன்னணி நடிகராக இருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தெலுங்கு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் வாகை சூடியது புஷ்பா.

 

- Advertisement -

இதற்கு முக்கிய காரணம், படத்தின் திரைக்கதை அமைப்பும், அதில் இடம்பெற்ற நட்சத்திரங்களின் தேர்வும் தான். குறிப்பாக ஒரு பக்கம் சாய்ந்துகொண்டு நடக்கும் அல்லு அர்ஜுனின் மேனரிஸம், பலருக்கும் பிடித்துப் போய்விட்டது. அவரது டயலாக் டெலிவரியும் படத்திற்கு வலு சேர்த்தது.

 

இதுபோக ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரின் நடிப்பும் சிறப்பாக இருந்தால் புஷ்பா திரைப்படம் இந்தியா முழுக்க பேசப்பட்டது. படத்தின் பாடல்களை சிறப்பாக அமைத்திருந்த தேவி ஸ்ரீ பிரசாத் இதற்காக தேசிய விருதை பெற்றார். அதே போல் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அல்லு அர்ஜுனுக்கும் தேசிய விருது கிடைத்தது.

 

இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தை ஓராண்டுக்கு மேலாக அதன் இயக்குனர் சுகுமார் எடுத்து வந்தார். தற்போது இந்த திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. டிசம்பர் ஐந்தாம் தேதி படம் ரிலீஸ் ஆகும் நிலையில், அதற்கான ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இது தொடர்பான நிகழ்ச்சி, பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற அதில் ஆயிரம் கணக்கான ரசிகர்கள் கூடியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

 

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற புஷ்பா 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டார். அப்போது மேடையில், நான் பிறந்த தமிழ் மண்ணுக்கு வணக்கம் எனக் கூறி உணர்ச்சிவசப்பட்டார். சென்னையில் பிறந்து தனது கல்லூரி காலம் வரை தங்கி இருந்த அல்லு அர்ஜுனிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர், நீங்கள் தமிழ்நாட்டில் யார் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பீர்கள் என்று கேட்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று தனது செய்கையின் மூலம் பதில் அளித்து அசத்தினார் அல்லு அர்ஜுன்.

 

- Advertisement -

சற்று முன்