- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை ஸ்ரீலீலாவை பின்தொடரும் 1.66 கோடி பாலோயர்ஸ், மாதந்தோறும் வருமானம் இத்தனை லட்சங்களா? அடேங்கப்பா இது...

நடிகை ஸ்ரீலீலாவை பின்தொடரும் 1.66 கோடி பாலோயர்ஸ், மாதந்தோறும் வருமானம் இத்தனை லட்சங்களா? அடேங்கப்பா இது வேற லெவல் சம்பவமா இருக்குதே?

- Advertisement -

கன்னட மொழி சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீ லீலா. கடந்த 2019ம் ஆண்டில் கிஸ் என்ற படத்தில் முதன்முதலில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடித்தார். இப்போது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நட்சத்திர நாயகியாக ஸ்ரீ லீலா மாறி இருக்கிறார். இவர் இந்தியராக இருந்தாலும் அமெரிக்காவில் பிறந்தவர்.

டாக்டரான இவருடைய தாயார் சிங்கிள் பேரண்ட் ஆக தனியாக வளர்க்கப்பட்டார். இளம் வயதிலேயே பரதநாட்டியம் போன்ற சில கலைகளை கற்று வளர்ந்த ஸ்ரீ லீலா தற்போது எம்பிபிஎஸ் டிகிரி படித்து முடித்திருக்கிறார். ஸ்ரீலீலா நடித்த படங்களில் பகவந்த் கேசரி ஸ்கந்தா குண்டூர்காரம் உஸ்தாத் பகத்சிங் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகி இருக்கின்றன.

- Advertisement -

மேலும் புஷ்பா 2 படத்தில் ஒரு சிறப்பு பாடல் காட்சியில் மட்டும் ஸ்ரீலீலா அல்லு அர்ஜூன் உடன் நடனமாடி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற நடிகை சமந்தாவின் நடனம் அளவுக்கு பெரிய அளவில் டிரண்டிங் ஆகி ரசிகர்களிடம் வைரல் ஆகவில்லை. நடிகை ஸ்ரீலீலா தமிழ் படங்களில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். கடைசியாக அவர் கதாநாயகியாக நடித்த படம் பராசக்தி படம் வெளியானது. இதில் அவருடைய நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.

ஸ்ரீலீலாவுடன் நடித்த சிவகார்த்திகேயன் அதர்வாவும் ஸ்ரீலங்காவுடன் நடிப்பது மிகவும் எளிமையாக இருப்பதாக கூறினர். இந்த நிலையில் நடிகை ஸ்ரீலீலா ஓம் என்னும் படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இதில் சாய்பல்லவி ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீலீலாவும் நடிக்கின்றனர். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

நடிகை ஸ்ரீலீலா இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ்களை கொண்ட ஒரு செலிபிரட்டியாக இருக்கிறார். ஸ்ரீலீலாவை சமூக வலைதளங்களில் மட்டும் சுமார் 16.6 மில்லியன் மக்கள் பாலோ செய்து வருகின்றனர். அப்படி என்றால் கிட்டத்தட்ட 1.66 கோடி பேர் பாலோயர்ஸ்களாக உள்ளனர். ஸ்ரீலீலாவின் புரொஃபைலை திறந்து பார்த்தால் பெரும்பாலும் அவை பிராண்டு கொலாப்பகுரேஷன்களாகவும் விளம்பர படங்களாகவும் இருக்கின்றன.

அவர் செய்திருக்கும் போட்டோ ஷூட்டுகளும் கூட பிராண்டுகளுக்கானதாக இருக்கின்றன. ஸ்ரீலீலா இன்ஸ்டாவில் ஒரு ஸ்பான்ஸரின் பிராண்டுக்கு கொடுக்கும் விளம்பரங்களுக்கு சுமார் 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வாங்குகிறார். ஒரு மாதத்திற்கு குறைந்த அளவு பிராண்டுகளே வருகின்றது என்று வைத்துக் கொண்டாலும் அவர் கிட்டத்தட்ட மாதந்தோறும் 50 லட்சம் ரூபாய் வரை இதன் மூலம் வருமானம் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. மாதம் 50 லட்சம் ரூபாய் இன்ஸ்டா மூலம் சம்பாதிக்கும் ஸ்ரீலீலாவை பார்த்து ரசிகர்கள் பெருமூச்சு விடுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்