- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியில் பலத்த அடி வாங்கிய தமிழ் பட இயக்குனர், கீர்த்தி சுரேஷை நம்பி மோசம் போயிட்டீங்களே...

இந்தியில் பலத்த அடி வாங்கிய தமிழ் பட இயக்குனர், கீர்த்தி சுரேஷை நம்பி மோசம் போயிட்டீங்களே ப்ரோ.. – கலாய்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லி. பிறகு அவர் ராஜா ராணி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த தெறி மெர்சல் பிகில் ஆகிய படங்களை இயக்கி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். 3 படங்களுமே மிகப்பெரிய ஹிட் படங்களாக இருந்தன.

இதைத் தொடர்ந்து இந்தியில் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் என்ற படத்தை அட்லீ இயக்கினார். 28 படங்களின் காப்பி என்று முதலில் கலாய்க்கப்பட்ட இந்த படம் 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை புரிந்தது. இதையடுத்து தொடர்ந்து இந்தியில் படம் இயக்க பல வாய்ப்புகள் அட்லியை தேடி வந்த நிலையில் தற்போது நடிகர் சல்மான்கான் நடிக்கும் ஒரு படத்தை அட்லி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

கடந்த 2016ம் ஆண்டில் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் தெறி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் தமிழில் விஜய் நாயகனாக நடிக்க சமந்தா எமி ஜாக்சன் ராதிகா சரத்குமார் மொட்டை ராஜேந்திரன் நடிகை மீனாவின் மகள் நைனிகா இயக்குனர் மகேந்திரன் பிரபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் தமிழில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் அட்லி இந்தியில் தெறி படத்தை ரீமேக் செய்து அவரே ரூ. 80 கோடி பட்ஜெட்டில் தயாரித்தார். பேபி ஜான் என்ற இந்த படத்தை கலீஷ் இயக்கினார். தமன் இசையமைத்தார். இதில் விஜய் கேரக்டரில் வரும் வருண் தவான், சமந்தா கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஜோடியாக நடித்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான, கடந்த 25ம் தேதி பேபி ஜான் படம் வெளியானது.

- Advertisement -

இந்த படம் முதல் நாளில் 11 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், 2வது நாளில் அது வெகுவாக குறைந்து 3.90 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. டிக்கெட் புக்கிங் முதல் வசூல் வரை பேபி ஜான் படத்துக்கு 3வது நாள் வசூல் மிகவும் குறைந்துள்ளது. இந்த படம் இந்த நிலையில் வசூல் தொடர்ந்தால், தயாரிப்பாளர் அட்லி பலத்த நஷ்டத்தை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் கவர்ச்சி படத்தை ஹிட் ஆக்கி விடும் என்று அட்லி பெரிதாக எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை.

இயக்குனர் அட்லி தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்த நிலையில், இந்தியில் படம் தயாரிப்பில் ஈடுபட்டு பலத்த அடிவாங்கி உள்ளதாக பலரும் அவரை கிண்டலடித்து வருகின்றனர். முதல் நாள் 11 கோடி வசூல், 2ம் நாளில் 4 கோடியை கூட வசூலிக்க முடியவில்லை. இவர் மொத்த பட்ஜெட் 80 கோடியை எப்படி எடுக்க போகிறார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். பேபி ஜான் படம் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான நிலையில், இதுவரை 15 கோடி ரூபாய் கூட வசூலில் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்