- Advertisement -
Homeபொழுதுபோக்குஉண்மையில் கவுண்டமணி எப்படிப்பட்டவர் என்பது பலருக்கு தெரியாது - பல ஆண்டுகளுக்கு பின் ஓப்பனாக சொன்ன...

உண்மையில் கவுண்டமணி எப்படிப்பட்டவர் என்பது பலருக்கு தெரியாது – பல ஆண்டுகளுக்கு பின் ஓப்பனாக சொன்ன நடிகை சுகன்யா

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு நடிகையாக கடந்த 1990களில் வலம் வந்தவர் நடிகை சுகன்யா. இந்தியன் படத்தில் தாத்தா கேரக்டரில் நடித்த அதே அளவுக்கு, அதே மேக்கப்பில் சுகன்யாவும் நடிப்பில் அசத்தியிருப்பார். ஆனால் பலரும் அதை சரியாமல் கவனிக்காமல் விட்டுவிட்டனர்.

இயக்குநர் பாரதிராஜா மூலம் புதுநெல்லு புதுநாத்து படத்தில் அறிமுகமானவர் நடிகை சுகன்யா. இதே படத்தில்தான் நடிகர் நெப்போலியனும் அறிமுகமானார். சுகன்யா நடிப்பிலும், அழகிலும் முதல் படத்திலேயே ரசிகர்களை வசீகரித்தார். தமிழில் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து, முன்னணி நடிகை ஆனார்.

- Advertisement -

இந்தியன், சின்னக்கவுண்டர், சோலையம்மா, உடன்பிறப்பு, திருமதி பழனிசாமி, வால்டர் வெற்றிவேல், சின்னமாப்ளே, செந்தமிழ் பாட்டு, மகாநதி, சேனாதிபதி, ஞானப்பழம், வண்டிச்சோலை சின்ராசு, சின்ன ஜமீன், இளவரசன் என 1991ம் ஆண்டு முதல் இதுவரை ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் நடிகை சுகன்யா.

நடிகர்கள் கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்தி, சரத்குமார், பாக்யராஜ் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த சுகன்யா, ரஜினிகாந்த் ஒருவருடன் மட்டும் நடிக்கவில்லை. ஆனால், முத்து படத்தில் நடிகை மீனாவுக்கு முன்பாக டைரக்டர் கேஎஸ் ரவிக்குமார் அந்த கேரக்டரில் நடிகை சுகன்யாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் ஏதோ சில காரணங்களால் அது நடக்காமல் போயுள்ளது.

- Advertisement -

திரைப்படங்களில் மட்டுமின்றி சில சீரியல்களிலும் நடித்த நடிகை சுகன்யா, நல்ல நடிகையாக ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தவர். இவர் நடித்த பல படங்களில் நடிகர் கவுண்டமணியுடன் நடித்திருக்கிறார். குறிப்பாக சின்னக்கவுண்டர், திருமதி பழனிசாமி, வால்டர் வெற்றிவேல், செந்தமிழ்பாட்டு, ஞானப்பழம், சேனாதிபதி என பல படங்களை சொல்லலாம்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை சுகன்யா, நீங்கள் சினிமாவில் பார்ப்பது போல கவுண்டமணி கிடையாது. சினிமாவில் அவர் காமெடியாக பேசி நடித்தாலும், உண்மையில் சினிமா பற்றிய நிறைய அறிவு இருக்கிறது. சினிமா குறித்து நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். நிறைய ஆங்கில படங்கள் பார்ப்பார். ஆங்கில நடிகர், நடிகையர் குறித்து பேசுவார். கவுண்டமணியிடம் நடிப்பை தாண்டியும் நிறைய திறமை இருக்கிறது. அவருடன் சேர்ந்து நடிப்பது மிகவும் பிடிக்கும், என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்