- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யாவின் 45ஆவது படத்தில் லப்பர் பந்து ஸ்வாசிகாவுக்கு ரொம்பவே ஸ்பெஷலான கதாபாத்திரமா... அடடே கேட்கும்போதே கிக்...

சூர்யாவின் 45ஆவது படத்தில் லப்பர் பந்து ஸ்வாசிகாவுக்கு ரொம்பவே ஸ்பெஷலான கதாபாத்திரமா… அடடே கேட்கும்போதே கிக் ஏறுதே…

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்தது லப்பர் பந்து திரைப்படம். மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், வசூல் மேல் வசூல் குவித்து சாதனை படைத்தது. இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவின் முதல் திரைப்படமாக இது அமைந்தது. கிரிக்கெட் மற்றும் உறவுகளை மையப்படுத்தி இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் தமிழரசன் பச்சமுத்து.

அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா, சஞ்சனா உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விளையாட்டு திரைப்படம் என்பதால் வெறும் கிரிக்கெட்டை மட்டும் இதில் இயக்குனர் காட்டிவிடவில்லை. தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசம், கணவன் மனைவிக்கு இடையேயான காதல், மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையேயான மோதல் என அத்தனையையும் சுவாரஸ்யமாக கொடுத்திருந்தார் இயக்குனர்.

- Advertisement -

படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை எந்த ஒரு காட்சியும் போர் அடிக்காமல் சென்றதால், லப்பர் பந்து வாகை சூடியது. குறிப்பாக அதில் நடித்த மலையாள நடிகை சுவாசிகா பலரது பாராட்டையும் பெற்றார். கோபமான காட்சிகள் வரும் இடங்களிலும் சரி, தனது மாமியாருடன் பேசும் போதும் சரி, உணர்ச்சிபூர்வமான நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து சுவாசிகாவுக்கு பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அண்மையில் சூரி நடித்திருந்த மாமன் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தார் சுவாசிகா. அவருக்கு சூரியின் சகோதரி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனை அவர் கச்சிதமாக செய்து முடித்து இருந்தார். இதேபோல் ரெட்ரோ திரைப்படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் வந்திருந்தார்.

- Advertisement -

தற்போது சூர்யாவின் 45 வது திரைப்படத்தில் சுவாசிகா நடித்து வருகிறார். ஆர் ஜே பாலாஜி இயக்கும் இந்த திரைப்படத்தில், திரிஷா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இதுகுறித்து பேசி இருக்கும் சுவாசிகா, எனக்கு இந்த கதாபாத்திரம் ரொம்பவே ஸ்பெஷல். வித்தியாசமான ரோலில் நான் வரப்போகிறேன்.

இப்படி ஒரு ரோல் உங்களுக்கு இதற்கு முன்பு கிடைத்திருக்கவே செய்யாது என்று கூறி இதற்கான வாய்ப்பை எனக்கு ஆர் ஜே பாலாஜி கொடுத்தார். எனது லப்பர் பந்து திரைப்படத்தையும், ஷாருக்கான் பார்த்திருக்கிறார். அது மட்டுமல்ல அந்த திரைப்படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். என்னோட மனைவி கேரக்டருக்கு, தமிழில் நடித்த அந்த நடிகைதான் வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார் என உற்சாகமாக சுவாசிகா கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்