- Advertisement -
Homeபொழுதுபோக்குதன் காதலரை புறநானூறு படத்தில் நடிக்க வைத்த பிரபல நடிகை - சூர்யாவிடம் கெஞ்சி கூத்தாடி...

தன் காதலரை புறநானூறு படத்தில் நடிக்க வைத்த பிரபல நடிகை – சூர்யாவிடம் கெஞ்சி கூத்தாடி நினைத்ததை சாதிக்க காரணம் என்ன

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில் சூர்யா மிகவும் தடுமாறினார். ஸ்கூல் பையன் போன்ற தோற்றத்தில், நேருக்கு நேர் படத்தில் சிம்ரன் ஜோடியாக சூர்யாவை பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டு போயினர். முகபாவனை நடிப்பு, நடனம் எதுவுமே தெரியாத அப்பாவியாக சூர்யா ஆரம்பத்தில் காணப்பட்டார்.

அதன்பின், நந்தா படம் மூலம் தனது வேறொரு முகத்தை காட்டினார் சூர்யா. அவரை அப்படி மாற்றிக்காட்டி, தமிழ் சினிமா ரசிகர்களை வியக்க வைத்தார் இயக்குநர் பாலா. அதன்பின் நல்ல கேரக்டர்களில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, இன்று முன்னணி ஹீரோவாக சிங்கம் போல நிமிர்ந்து நிற்கிறார் சூர்யா.

தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் மிக குறைவு. அதில் குறிப்பிட்டத்தக்க நல்ல படங்களை தந்து வருபவர் சுதா கொங்கரா. அவரது முதல் படம் துரோகி. இரண்டாவது படம் இறுதிச்சுற்று. மூன்றாவது படம் சூரரைப் போற்று. இதில் துரோகி படம் தவிர, மற்ற இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன.

இந்நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா விரைவில் நடிக்க இருப்பதாகவும், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துவரும் கங்குவா படத்தை தொடர்ந்து, அவர் சுதா கொங்கரா படத்தில் கமிட் ஆவார் எனவும் பேசப்பட்ட நிலையில், இன்று அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

இந்த படத்தில் துல்கர் சல்மான், பகத் பாசில் மனைவி நஸ்ரியா பகத் உள்ளிட்டோர் நடிக்கும் நிலையில், விஜய்வர்மா என்பவரும் நடிக்கிறார். இவர் நடிகை தமன்னாவின் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது. தமன்னாவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் இவருக்கு, சூர்யா படத்தில் எப்படி வாய்ப்பு கிடைத்து என்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமன்னா, ஏற்கனவே சூர்யாவுடன் அயன் படத்தில் ஜோடியாக நடித்த வகையில் நட்பு உண்டு. அந்த வகையில், சூர்யாவிடம் கெஞ்சி கூத்தாடி தன் காதலர் விஜய் வர்மாவுக்கு தமிழ் சினிமாவில் அதுவும் சூர்யாவுடன் புறநானூறு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்து இருக்கிறார். விஜய் வர்மா, தமன்னாவின் காதலராக, ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு எரிச்சலை தந்தவர். இந்த படத்தில் என்ன மாதிரியான கேரக்டரில் நடிக்க போகிறார் என்பது, ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. ஆனால், தமிழில் தன் காதலர் ஹீரோவாக முன்னேறும் கனவில் இந்த காரியத்தை சாதித்து இருக்கிறார் தமன்னா என்கின்றனர்.

சற்று முன்