- Advertisement -
Homeபொழுதுபோக்குதிரிஷாவுக்காக முதலில் எதிர்ப்பு குரல் எழுப்பிய சேரன், ரெஸ்பான்ஸ் பண்ணாத திரிஷா - வழக்கம்போல கண்டுகொள்ளாத...

திரிஷாவுக்காக முதலில் எதிர்ப்பு குரல் எழுப்பிய சேரன், ரெஸ்பான்ஸ் பண்ணாத திரிஷா – வழக்கம்போல கண்டுகொள்ளாத நடிகர் சங்கம்

- Advertisement -

தமிழ் சினிமாவில் உணர்வுள்ள ஒரு தமிழராக இருப்பவர்கள் சில இயக்குநர்கள்தான். அதில் இயக்குநர் சேரன் முதன்மையானவர். அதே போல் இயக்குநர்கள் சமுத்திரக்கனி, சசிக்குமார், தங்கர்பச்சான், கரு பழனியப்பன் போன்றவர்களும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் மெத்தனம் காட்டாதவர்கள்.

அதிமுக நிர்வாகி ஒருவர், நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்த தெரிய வந்தவுடன் முதலில் எதிர்ப்பு குரல் எழுப்பி, தனது கண்டனத்தை தெரிவித்தவர் இயக்குநர் சேரன் தான். அவரது எதிர்ப்பு குரலுக்கு பிறகே, இது என்ன பிரச்னை என ஊடகங்கள் இதில் ஆர்வம் காட்டிய பிறகுதான் இப்படி ஒரு அவதூறு, திரிஷா மீது கூறப்பட்டதே மற்றவர்களுக்கும் தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் முதலில் சேரன் தொடர்பு கொண்டது தென்னிந்திய நடிகர் சங்கத்ததை தான், நடிகர் நாசர் தலைவர், செயலாளர் நடிகர் விஷால், பொருளாளர் கார்த்தி என மூன்று பேரையும் போனில் தொடர்பு கொண்டிருக்கிறார் இயக்குநர் சேரன்.

ஆனால் அவர்கள் போனை எடுத்து பேசவில்லை. அதுமட்டும் இல்லை. அவர் போன் செய்து 2 நாட்களாகியும் எதற்காக அழைத்தீர்கள் என, திரும்ப அவர்கள் அழைத்தும் சேரனிடம் பேசவில்லை. இதேபோல் ஒரு சம்பவம்தான், நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா பிரச்னை ஏற்பட்ட போதும் நடந்தது. அவர்கள் நினைத்திருந்தால், திரிஷா – மன்சூர் அலிகானை நேரில் வரவழைத்து உட்கார்ந்து பேசி, சமரச தீர்வு ஏற்படுத்தி இருக்க முடியும். ஆனால் செய்யவில்லை.

இயக்குநர் சேரன், தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க ஒரு சீனியர் இயக்குநராக, நடிகராக இருப்பவர். அவர் நல்ல வெற்றிப்படங்களை, சமுதாய பொறுப்புள்ள படங்களை தந்திருப்பவர். அப்படிப்பட்ட சீனியர் இயக்குநருக்கு மரியாதை தர, தென்னிந்திய நடிகர் சங்கம் தவறி விட்டது. இதுமட்டுமல்ல, எப்போது பிரச்னை என்றாலும், நடிகர் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டாலும், அவர்கள் போனை எடுக்கவே மாட்டார்கள்.

அதுமட்டுமின்றி நடிகை திரிஷா, சேரன் இயக்கிய படங்களில் இதுவரை நடிக்கவில்லை. அதே போல் திரிஷா நடித்த படங்களிலும் சேரன் நடித்தது இல்லை. ஆனால் தான் சார்ந்திருக்கும் ஒரு கலைத்துறையில் பெண் மீது ஒரு களங்கம் ஏற்பட்டதால், திரிஷா குறித்து தவறாக பேசியதால், ஆவேசம் கொண்ட சேரன் எதிர்ப்பை தெரிவித்தார். ஆனால் இதுவரை திரிஷா, சேரனுக்கு போனில் அழைத்து ஒரு நன்றி கூட சொல்லவில்லை. தனது வலைதள பக்கத்தில், எனக்காக ஆதரவு தெரிவித்து பேசியவர்களுக்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை. இப்படி தனக்காக வருபவர்களை கண்டுக்கொள்ளாமல் விட்டால், அடுத்தமுறை உணர்வால் உந்தப்பட்டு வருபவர்கள் கூட, நமக்கு எதுக்கு வேண்டாத வேலை என்று விலகிச் செல்லவே நினைப்பார்கள்.

சற்று முன்